சக்தி சிதம்பரம் இயக்கத்தில் யோகிபாபு, மாளவிகா மேனன் நடிப்பில் உருவாகி உள்ள படம் 'பேய் மாமா'. மேலும், மனோபாலா, மொட்ட ராஜேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர், இமான் அண்ணாச்சி, சிங்கம்புலி, கோவை சரளா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
"தலைப்புக்கு ஏற்ப இது ஒரு திகில் படம். வில்லன் வெளிநாட்டில் உள்ள ஒரு தீயசக்தியுடன் சேர்ந்து இந்தியாவில் உயிர்க் கொல்லி கிருமியைப் பரப்ப திட்டமிடுகிறான். இதற்காக அவனுக்கு பல கோடி ரூபாய் பணம் கிடைக்கிறது.
"இதையறிந்த உள்ளூர் சித்த வைத்தியர் ஒருவர் அப்பாவி மக்களைக் காப்பாற்ற வில்லனைக் கொன்றுவிடுகிறார். இதை சுவாரசியமாகச் சொல்லி இருக்கிறோம். அதிர்ஷ்டவசமாக இந்தக் கதை நடப்பு காலகட்டத்துக்குப் பொருத்தமாக அமைந்திருக்கிறது," என்கிறார் இயக்குநர்.
, :

