மக்களைக் காப்பாற்றும் சித்த வைத்தியர்

மக்களைக் காப்பாற்றும் சித்த வைத்தியர்

1 mins read
52a3de7f-ca7f-4470-8580-361f78040337
-

சக்தி சிதம்­ப­ரம் இயக்­கத்­தில் யோகி­பாபு, மாள­விகா மேனன் நடிப்­பில் உரு­வாகி உள்ள படம் 'பேய் மாமா'. மேலும், மனோ­பாலா, மொட்ட ராஜேந்­தி­ரன், எம்.எஸ்.பாஸ்­கர், இமான் அண்­ணாச்சி, சிங்­கம்­புலி, கோவை சரளா உள்­ளிட்ட பல­ரும் நடித்­துள்­ள­னர்.

"தலைப்­புக்கு ஏற்ப இது ஒரு திகில் படம். வில்­லன் வெளி­நாட்­டில் உள்ள ஒரு தீய­சக்­தி­யு­டன் சேர்ந்து இந்­தி­யா­வில் உயிர்க் கொல்லி கிரு­மி­யைப் பரப்ப திட்­ட­மி­டு­கி­றான். இதற்­காக அவ­னுக்கு பல கோடி ரூபாய் பணம் கிடைக்­கிறது.

"இதை­ய­றிந்த உள்­ளூர் சித்த வைத்­தி­யர் ஒரு­வர் அப்­பாவி மக்­க­ளைக் காப்­பாற்ற வில்­ல­னைக் கொன்­று­வி­டு­கி­றார். இதை சுவா­ர­சி­ய­மா­கச் சொல்லி இருக்­கி­றோம். அதிர்ஷ்­ட­வ­ச­மாக இந்­தக் கதை நடப்பு கால­கட்­டத்­துக்­குப் பொருத்­த­மாக அமைந்­தி­ருக்­கிறது," என்­கி­றார் இயக்­கு­நர்.

, :   