சேதுபதி மனைவியாக ரெஜினா
இந்தியில் உருவாகும் இணையத் தொடர் ஒன்றில் விஜய்சேதுபதியும் அவரது மனைவியாக ரெஜினாவும் நடிக்க உள்ளனர்.
இதில் இந்தி நடிகர் ஷாகித் கபூரும் ராஷி கண்ணாவும் மற்றொரு ஜோடியாக நடிக்கிறனர்.
பாலிவுட் இரட்டை இயக்குநர்கள் ராஜ், டீகே இயக்கும் இணையத் தொடரில் சேதுபதி எப்போதோ ஒப்பந்தம் செய்யப்பட்டுவிட்டார். அவரது ஜோடி யார் என்பது தெரியாமல் இருந்தது.
இந்நிலையில் ரெஜினா இப்படக்குழுவுடன் இணைந்துள்ளார். இதுதான் அவர் நடிக்கும் முதல் இணையத்தொடராம். இவரும் சேதுபதியும் இதற்கு முன்பு 'முகிழ்' என்ற தமிழ்ப் படத்தில் இணைந்து நடித்துள்ளனர். எனினும் அது பெரிதாகப் பேசப்படவில்லை.
டாப்சி: 'ஓடிடி'க்கு தணிக்கை தேவை
'ஓடிடி' தளங்களில் வெளியாகும் படைப்புகளை யும் தணிக்கை செய்ய வேண்டும் என்றும் அவற்றில் தவறான காட்சிகள் இடம்பெறுவ தாகவும் நடிகை டாப்சி விமர்சித்துள்ளார்.
சினிமா துறையில் உள்ள ஆர்வம் காரணமாக நடிப்புடன் நிற்காமல் படத் தயாரிப்பாளராவும் மாறி இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், தயாரிப்பாளரானதும் தமக்குப் பொறுப்புணர்வு அதிகரித்துள்ளதாகச் சொல்கிறார்.
"ஓடிடி எனப்படும் நேரடியாக இணையத்தில் வெளியீடு காணும் படங்களில் பல மோசமான காட்சிகள் இடம்பெறுகின்றன. இதனால் குடும்பத்துடன் படம் பார்ப்பதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே ஒடிடி தளங்களில் இடம்பெறும் படைப்புகளையும் தணிக்கை செய்ய வேண்டும்," என்கிறார் டாப்சி.
பாராட்டு தெரிவித்த சமந்தா
"மிகக் கனமான, உணர்வுபூர்வமான கதாபாத்திரங்களிலும் கூட கொஞ்சம் சிரமப்பட்டால் நடித்துவிடலாம். ஆனால் நகைச்சுவை கதா பாத்திரங்களில் நடிப்பது மிகக் கடினமான ஒன்று," என்கிறார் சமந்தா.
நகைச்சுவைக் கலைஞர்களை தாம் பெரிதும் மதிப்பதாக அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
'ஓ பேபி' படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான 'சைமா' விருது சமந்தாவுக்கு அளிக்கப்பட்டுள் ளது. அதில் படம் முழுவதும் நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
"நகைச்சுவை காட்சிகளில் எப்போது, எப்படி வசனங்களைப் பேசவேண்டும், உடல் மொழி எவ்வாறு இருக்கவேண்டும் என்பது தனிக் கலை. அதில் இன்னும் தேர்ச்சி பெற வேண்டும் என நினைக்கிறேன்," என்கிறார் சமந்தா.

