திரைக்கு வரும் முன்பே விருதுகளைக் குவிக்கும் ‘கொடியன்’

திரைக்கு வரும் முன்பே பல விரு­து­க­ளைப் பெற்று வரு­கிறது ‘கொடி­யன்’ திரைப்­ப­டம். ‘மூடர் கூடம்’ படத்­தின் ஒளிப்­ப­தி­வா­ளர் டோனி சான் இயக்­கி­யுள்ள முதல் படம் இது.

திகில் படம் என்­ப­து­டன் ஒரு சோதனை முயற்சி என்­றும் சொல்­ல­லாம் என்­கி­றார் டோனி.

“திகில் படம் என்­றால் ரசிகர்­களை இருக்­கை­யின் நுனி­யில் அமர வைக்க வேண்­டும், முடிந்த­வரை பய­மு­றுத்த வேண்­டும் என்­ப­தெல்­லாம் பழைய உத்­தி­கள். இது அத்­த­கைய விதி­மு­றை­களில் இருந்து முற்­றி­லும் மாறு­பட்­டது.

“மேலும் பணத்தை மட்­டுமே குறிக்­கோ­ளா­கக் கொண்டு உரு­வான பட­மும் அல்ல. சினி­மா­வுக்கு ஏற்ற இலக்­க­ணத்­து­டன் எடுக்­கப்­பட்ட படம்,” என்­கி­றார் டோனி சான்.

‘கொடி­யன்’ கதையை எழு­தும்­போது விஜய் சேது­ப­தியை முக்­கிய கதா­பாத்­தி­ரத்­தில் நடிக்க வைக்க வேண்­டும் என்­ப­து­தான் இவ­ரது திட்­ட­மாக இருந்­துள்­ளது. ஆனால் அவர் பல படங்­களில் வரி­சை­யாக நடித்­துக்­கொண்­டி­ருந்­த­தால் கால்­ஷீட் ஒதுக்க முடி­ய­வில்­லை­யாம்.

“மேலும், இது பய­ணம் சம்­பந்­தப்­பட்ட கதை. அத­னால் ஒவ்­வொரு காட்­சி­யை­யும் வெவ்­வேறு இடங்­களில் பட­மாக்க வேண்டி இருந்­தது. இதற்கு அதி­கம் செல­வா­கும் என்­ப­தால் தயா­ரிப்­பா­ள­ருக்கு ஏற்­படும் சிர­மங்­க­ளை­யும் கவ­னத்­தில் கொள்ள வேண்டி இருந்­தது. அத­னால் பெரும்­பா­லும் புது­மு­கங்­களை நடிக்க வைத்­தோம். அவர்­க­ளு­ம் சிறப்­பாக நடித்­துள்­ள­னர்,” என்­கி­றார் டோனி.

‘காக்கா முட்டை’யில் நடித்த நிவாஸ் ஆதித்­தன் தான் நாய­கன். நாயகி நித்ய கன்­ன­டப் படங்­களில் நடித்த அனு­ப­வம் உள்­ள­வர். தமி­ழில் இப்­போ­து­தான் அறி­மு­க­மா­கி­றார். வில்­ல­னாக ‘பில்லா’, ‘சூது கவ்­வும்’ படங்­களில் நடித்த யோக் ஜேப்பி நடித்­துள்­ளார்.

‘இண்டோ - பிரெஞ்ச்’ திரைப்­பட விழா, கூடோ அனைத்­து­லக திரைப்­பட விழா என அடுத்­த­டுத்த நிகழ்­வு­களில் பங்­கேற்று சிறந்த படம், சிறந்த குணச்­சித்­திர நடி­கர், சிறந்த இயக்­கு­நர் என வரி­சை­யாக விரு­து­க­ளைப் பெற்று வரு­கிறது ‘கொடி­யன்’.

“இ­தில் நடித்­துள்ள எல்­லாருமே கதா­பாத்­தி­ரத்­துக்குப் பொருத்­த­மான, திற­மை­யுள்ள கலை­ஞர்­கள். ஒரு­வர் கூட நட்­சத்­திர நடி­கர் அல்ல. ஆனால் படம் வெளி­யான பிறகு ரசி­கர்­க­ளால் நன்கு அறி­யப்­பட்­ட­வர்­க­ளாக மாறி­வி­டு­வார்­கள்.

“என்னை நம்பி தயா­ரிப்­பாளர்­கள் முத­லீடு செய்­துள்­ள­னர். எனவே இந்­தப் படம் விரு­து­களை மட்­டு­மல்­லா­மல் நல்ல வசூ­லை­யும் பெற வேண்­டும். அப்­போ­து­தான் எனக்கு மன­நி­றைவு ஏற்­படும்,” என்­கி­றார் டோனி.

திகில் படம் என்­பதை மட்­டுமே இப்­போது சொல்ல இய­லும் என்­றும் சில விஷ­யங்­களை திரை­யில் பார்க்­கும்­போது தெரிந்து கொண்­டால்­தான் சுவா­ர­சி­ய­மாக இருக்­கும் என்­றும் சொல்­கி­றார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!