திரைத் துளிகள்

திரைத் துளிகள்

1 mins read
eee23c40-1464-4bf6-ab49-6e20a516b5ab
-
multi-img1 of 2

வேதனையில் நாக சைதன்யா

மனைவி சமந்தாவை விவாகரத்து செய்ய முடிவு செய்திருப்பதாக வெளியான தகவல் உண்மையல்ல என்று நடிகர் நாக சைதன்யா கூறியுள்ளார்.

இதுபோன்ற வதந்தி மன வேதனை அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

"இன்றைய பரபரப்பான சூழலில் ஒரு செய்தியை மறக்கடிக்க மற்றொரு செய்தி உடனே வந்து விடுகிறது. இந்தப் புரிதல் ஏற்படுவதற்கு முன்பு எங்களது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து வெளிவரும் தகவல்கள் கவலையை ஏற்படுத்தும்.

"ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. எந்தச் செய்தி வெளிவந்தாலும் அவற்றைக் கண்டுகொள்வதோ, கவலைப் படுவதோ இல்லை," என்று நாக சைதன்யா கூறியுள்ளார்.

தலைப்பு குறித்து ஹரி விளக்கம்

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்து வரும் படம் 'யானை'. இந்தத் தலைப்பை தேர்வு செய்தது ஏன் என்பது குறித்து ஹரி விளக்கம் அளித்துள்ளார்.

இந்தப் படத்தில் பிரியா பவானி சங்கர் நாயகியாக நடிக்க, சமுத்திரக்கனி, போஸ் வெங்கட், யோகி பாபு, இமான் அண்ணா்சி, ராதிகா சரத்குமார் உட்பட பலர் முக்கிய கதா பாத்திரங்களை ஏற்றுள்ளனர்.

"இப்படத்தின் நாயகன் ஒரு யானையைப் போல் பலம் மிகுந்தவன். இதை வெளிப்படுத்தும் வகையில் சில சண்டைக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. யானை பலம் என்பதற்கு இணையாக நாயகனின் செயல்பாடுகள் இருக்கும் என்பதாலேயே இந்தத் தலைப்பை தேர்வு செய்தோம்.

"சிங்கம் போல் கம்பீரமானவன் நாயகன் என்பதால்தான் 'சிங்கம்' என்ற தலைப்பும் வைக்கப்பட்டது," என்கிறார் இயக்குநர் ஹரி.