சந்தனா: தமிழால் கிடைத்த வாய்ப்பு

‘கொற்­றவை’ படத்­தின் மூலம் தமிழ் சினி­மா­வில் அறி­மு­க­மா­கி­றார் சந்­தனா ராஜ்.

சொந்த ஊர் கேரளா. பள்ளி, கல்­லூ­ரிப் படைப்பை முடித்த பிற­கு­தான் சினிமா குறித்து யோசித்­த­தா­கச் சொல்­கி­றார். குடும்­பத்­தில் வேறு யாருக்­கும் சினிமா துறை­யில் தொடர்­பில்லை.

சந்­தனா தமி­ழில் நடித்த முதல் படம் ‘ஒத்­தைக்கு ஒத்தை’. அது இன்­னும் வெளி­யா­காத நிலை­யில், அடுத்த வாய்ப்பு தேடி­வர, தயக்­க­மின்றி ஒப்­புக்கொண்­டா­ராம்.

“என் தந்தை ஒரு தொழி­ல­தி­பர். பங்­குச்­சந்தை விவ­கா­ரங்­க­ளைக் கையாள்­வ­தில் மிகுந்த திற­மை­சாலி. ‘பங்­குச்­சந்தை புலி’ என்­று­தான் அவரை நண்­பர்­கள் அழைப்­பார்­கள். அம்மா வழக்­க­றி­ஞ­ராக உள்­ளார்.

“சிறு வய­தில் இருந்தே எனக்கு மாட­லிங், சினி­மா­வில் ஆர்­வம் அதி­கம். ஆனால் படிப்­பு­தான் முக்­கி­யம் என்று பெற்­றோர் கூறி­விட்­ட­தால், அதில் மட்­டுமே கவ­னம் செலுத்­தி­னேன்.

“படிப்பை முடித்த பின்­னர் சொந்த முயற்சி மூலம் மாட­லி­ங் துறை­யில் கால்­ப­தித்­தேன். அதன் பிறகு சினிமா வாய்ப்­பும் தேடி வந்­தது,” என்று சொல்­லும் சந்­தனா, சினிமா ஆர்­வம் கார­ண­மாக முறைப்­படி பர­த­நாட்­டி­யம் கற்­றுத் தேர்ந்­துள்­ளார்.

அவர் பேசும் தமி­ழும் நட­னத்­தில் பெற்­றுள்ள தேர்ச்சி­யும்­தான் சினிமா வாய்ப்பை பெற்­றுத் தந்­துள்­ளது. ‘ஒத்­தைக்கு ஒத்த’ படம் இன்­னும் வெளி­யா­க­வில்லை என்­றா­லும், அதன் மூலம் நல்ல அனு­ப­வம் கிடைத்­த­தா­கச் சொல்­கி­றார்.

“இயக்­கு­நர் சி.வி.குமார் தயா­ரிப்­பில் உரு­வா­கிறது ‘கொற்­றவை’. தமிழ் தெரிந்த கதா­நா­ய­கியைத் தேடு­வதாகக் கேள்­விப்­பட்டு, நானும் நேர்­மு­கத் தேர்­வுக்­குச் சென்­றி­ருந்­தேன். தமி­ழில் சில வச­னங்­களைப் பேசு­மாறு கேட்­டுக்கொண்­ட­னர். தமிழ், தமி­ழர்­கள் வர­லாறு, ஆதிக் குடி­மக்­கள் என்ற கோணத்­தில் கதை சொல்­கி­றார்­கள்.

“இந்­தப் படத்­தில் எனக்கு அமைந்­தி­ருப்­பது கனவுக் கதா­பாத்­தி­ரம் என்று கூற­லாம். அந்­த­ அள­வுக்கு மிக அழ­கான, சவா­லான கதா­பாத்­திரம் என்­பேன். என் நடிப்­புத் திற­மையை வெளிக்­காட்ட கிடைத்த அற்­பு­த­மான வாய்ப்­பா­கக் கரு­து­கி­றேன்.

“எத்­த­கைய கதா­பாத்­தி­ர­மாக இருந்­தா­லும் அது நமக்கு பெயர் வாங்­கிக் கொடுப்­ப­தாக இருக்க வேண்­டும். நல்ல கதைக்­க­ளம்­தான் நம்மை ரசி­கர்­க­ளி­டம் கொண்டு சேர்க்­கும்,” என்று சொல்­லும் சந்­த­னா­வுக்கு அனைத்து கதா­நா­ய­கர்­க­ளு­ட­னும் நடிக்க வேண்­டும் என்­ப­து­தான் ஆசை­யாம்.

கதா­நா­ய­கர்­களில் மனம் கவர்ந்­த­வர் என்று குறிப்­பிட்­டுச் சொல்ல யாரும் இல்லை. நல்ல படத்­தில், நன்­றாக நடித்­துள்ள அனை­வ­ருமே தமக்­குப் பிடித்­த­மா­ன­வர்­கள் என்­கி­றார்.

“நடி­கை­களில் மட்­டும் இரு­வரை ரொம்­பப் பிடிக்­கும். ரம்யா கிருஷ்­ண­னின் நடிப்­புக்கு நான் அடிமை. அவர் திரை­யில் தோன்­றும்­போது என்­னையே மறந்­து­வி­டு­வேன்.

“அதற்கு அடுத்து நயன்­தாரா­வின் நடிப்­பும் தன்­னம்­பிக்­கை­யும் ரொம்­பப் பிடிக்­கும்.

“தமி­ழில் தொடர்ந்து வாய்ப்பு கிடைத்­தால் என் திறமை நன்கு வெளிப்­படும். பிற மொழி­களில் வாய்ப்பு கிடைத்­தா­லும் நடிப்­பேன். எனினும் தமிழுக்குத்தான் எப்போதும் முதலிடம்,” என்­கி­றார் இளம் நாயகி சந்­தனா ராஜ்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!