பெண்கள் போராட வேண்டும் என்கிறார் ஜோதிகா

பெண்கள் போராட வேண்டும் என்கிறார் ஜோதிகா

1 mins read
27128508-a877-4a18-aab9-8c057de06e4f
'பொன்மகள் வந்தாள்' படத்தில் ஜோதிகா. -

பாலி­யல் தொல்­லை­கள் குறித்து பெண்­கள் அமை­தி­யாக இருந்­து­வி­டக் கூடாது என வலி­யு­றுத்தி உள்­ளார் ஜோதிகா.

இது தொடர்­பாக இன்ஸ்­ட­கி­ராம் பக்­கத்­தில் அவர் பதி­விட்­டுள்­ளார்.

சென்­னை­யில் ஒன்­பது வய­துச் சிறு­மியை அவ­ரது 48 வயது உற­வி­னர் பாலி­யல் வன்­கொ­டு­மைக்கு உட்­ப­டுத்­தி­னார். ஜோதிகா நடித்த பொன்­ம­கள் வந்­தாள் படத்­தைப் பார்த்­து­விட்டு அந்­தச் சிறுமி தனக்கு நேர்ந்த அவ­லம் குறித்து தன் தாயி­டம் சொன்­னதை அடுத்து, அந்த உற­வி­னர் சிக்­கி­னார். பின்­னர் நடந்த வழக்­கில் அவ­ருக்கு ஐந்­தாண்டு சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

இதை­ய­டுத்து படக்­கு­ழு­வி­ன­ருக்­குப் பாராட்­டு­கள் குவி­கின்­றன.

இந்­நி­லை­யில், இன்ஸ்­ட­கி­ராம் பதி­வில், "பெண்­கள் அமை­தி­யைத் தகர்த்­தெ­றி­யுங்­கள். ஒவ்­வொரு முறை­யும் ஒரு பெண் தனக்­காக எழுந்து நிற்­கும்­போது, அவள் தன்­னை­ய­றி­யா­மல் அனைத்து பெண்­களுக்­கா­க­வும் நிற்­கி­றாள்," என்று குறிப்­பிட்­டுள்­ளார் ஜோதிகா.