‘ஓய்வு மிக அவசியமானது’

"அன­பெல் சேது­பதி' படம் குறித்து ரசி­கர்­கள் எவ்­வ­ளவு காலம் பேசு­வார்­கள் என்­பது தெரி­யாது. ஆனால் இந்­தப் படத்தை என்­னால் மறக்க இய­லாது. அதற்­குக் கார­ணம் விஜய் சேது­பதி," என்­கி­றார் நடிகை டாப்சி.

ஏனெ­னில் பொது­வாக நடி­கர்­களை மையப்­படுத்­தியே இயங்­கும் சினிமா உல­கில் நாயகியை முன்­னி­லைப்­ப­டுத்­தும் வகை­யில் தலைப்பு வைத்­தி­ருப்­பதை சுட்­டிக்­காட்­டு­கி­றார்.

"இது விஜய் சேது­ப­தி­யு­டன் நான் இணைந்து நடித்த முதல் படம். தமி­ழில் முன்­னணி நடி­க­ராக உள்ள போதி­லும், பெருந்­தன்­மை­யாக நடந்துகொள்­கி­றார்.

"மேலும் பெண் கதா­பாத்­தி­ரத்­துக்கு முக்­கி­யத்­தும் அளிக்­கும் திரைக்­கதை என்­ப­து தெரிந்­தும் படத்­த­லைப்­பில் தனக்கு முக்­கி­யத்­து­வம் இல்லை என்­பதை அறிந்­தும் அவர் அலட்டிக் கொள்ளவில்லை.

"என் திரைப்பய­ணத்­தில் இது­வரை இப்­படிப்­பட்ட நடி­கரை சந்­தித்­தது இல்லை. அத­னால் அவ­ரு­டன் இணைந்து நடிக்க விரும்­பி­னேன்," என்­கி­றார் டாப்சி.

'அன­பெல் சேது­பதி' படம் கல­வை­யான விமர்­ச­னங்­க­ளைப் பெற்­றுள்ள நிலை­யில், இனி இது­போன்ற திகி­லும் நகைச்­சு­வை­யும் கலந்துள்ள கதை­களில் தம்மை பார்்க்க இய­லாது என்று சொல்­லும் டாப்சி, திகில் கதை­களில் நடிப்­ப­தில் தமக்கு பெரி­தாக ஆர்­வம் இல்லை என்­கி­றார். பிறகு எதற்­காக 'அன­பெல் சேது­ப­தி­'யில் நடித்­தார் என்ற கேள்­விக்­கும் அவ­ரது பதில் தயா­ராக உள்­ளது.

"இதற்கு முன்பு தமி­ழில் 'காஞ்­சனா-2', தெலுங்­கில் 'அனந்தோ பிரம்மா' ஆகிய இரு திகில் படங்­களில் நடித்­துள்­ளேன். தொடக்­கத்­தில் இரு படங்­க­ளி­லும் நடிக்க விருப்­ப­மில்லை என்று கூறி­யதே உண்மை. கார­ணம், பல விஷ­யங்­கள் மிகைப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கும் எனக் கருதி­னேன். ஆனால் இவற்­றின் திரைக்­க­தை­கள் மனத்­தைக் கவ­ரும் வகை­யில் இருந்­தன. அத­னால்­தான் ஒப்­புக்­கொண்­டேன்.

"மேலும், இயக்­கு­நர் தீபக் சுந்­தர்­ரா­ஜன் நான்­தான் நாய­கி­யாக நடிக்கவேண்­டும் என்று முடிவு செய்து, என்­னி­டம் மட்­டுமே கதையை விவ­ரிக்க வேண்­டும் என்று பிடி­வா­த­மாக இருந்­தார். இதை அறிந்­த­தும் அவரை அழைத்து கதை கேட்­டேன். கற்­ப­னை­யும் நகைச்­சு­வை­யும் ­கூ­டிய கதை என்னைக் கவர்ந்­தது," என்­கி­றார் டாப்சி.

எத்­த­கைய அடிப்­ப­டை­யில் படங்­களை ஒப்புக்­கொள்­கி­றீர்­கள் என்ற கேள்­விக்கு அவர் அளிக்­கும் பதில், "எதற்­காக நான் ஒரு திரைப்­ப­டத்­தைப் பணம் கொடுத்­துப் பார்க்கவேண்­டும், இரண்டு மணி நேரத்தை எதற்­கா­கப் படம் பார்க்­கச் செல­விட வேண்­டும், படம் முடிந்த பிறகு திரை­ய­ரங்­கில் இருந்து வெளியே செல்­லும் ரசி­கர்­கள் என்னை நினைத்­துப் பார்ப்­பார்­களா, எதிர்­கா­லத்­தில் இந்­தப் படத்­தைப் பற்றி நினை­வு­கூ­ரும்­போது எனது கதா­பாத்­தி­ரம் நினை­வுக்கு வருமா? என்ற கேள்­வி­க­ளுக்கு விடை கிடைத்­தால் மட்­டுமே ஒரு கதை­யில் நடிக்க ஒப்­புக்­கொள்­வேன்," என்­கி­றார்.

தமி­ழில் அடுத்து 'ஜன கன மண' என்ற படத்­தில் நடித்து வரும் டாப்சி கைவ­சம் குறைந்­தது ஆறு படங்­கள் உள்­ளன. ஒரு­சி­ல­ரைப் போல் ஓய்­வின்றி நடிப்­ப­தில் இவ­ருக்கு உடன்­பாடு இல்­லை­யாம். அது உடல்நலனை மட்­டு­மல்ல, மன அழுத்­தத்­தை­யும் ஏற்­ப­டுத்­தும் என்­கி­றார்.

இது­வரை நடி­கை­யாக சம்­ப­ளம் வாங்­கி­ய­வர், இப்­போது தயா­ரிப்­பா­ள­ரா­க­வும் மாறி உள்­ளார். தாம் நடிக்­கும் 'ப்ளர்' என்ற இந்­தப் படத்தை தயா­ரிக்­கி­றா­ராம்.

இந்­தி­யத் திரை­யு­ல­கில் நடி­கை­க­ளுக்கு சம்­ப­ளம் தரு­வ­தில் பாகு­பாடு உள்­ளது என்­பது டாப்சி முன்­வைக்­கும் முதன்­மைக் குற்­றச்­சாட்டு.

பல வெற்­றிப் படங்­களில் நாய­கி­க­ளின் பங்கு முக்­கி­ய­மா­ன­தாக இருந்­த­போ­தி­லும், சம்­ப­ளம் என்று வரும்­போது சம­நிலை கடைப்பி­டிக்­கப்­ப­டு­வது இல்லை என்று சுட்­டிக்­காட்­டு­கி­றார்.

"ஒரு நடி­கை­யாக படத்­தின் விளம்­பர, சந்­தைப் ப­டுத்­துதல் நட­வ­டிக்­கை­கள் குறித்து நான் எந்த முடி­வும் எடுக்க இய­லாது. ஆனால் தயா­ரிப்­பா­ளர் என்ற வகை­யில் அதிக சுதந்­தி­ரம் கிடைத்­துள்­ளது," என்­கி­றார் டாப்சி.

அடுத்து இந்­திய பெண்­கள் கிரிக்­கெட் அணித் தலை­வ­ரான மிதாலி ராஜின் வாழ்க்கை வர­லாற்­றுப் படத்­தில் நடிக்­கும் டாப்சி, இந்­தப் படம் இந்­திய சினி­மா­வின் மிக முக்­கி­ய­மான படைப்­பு­களில் ஒன்­றாக இருக்­கும் என நம்­பிக்­கை­யு­டன் சொல்­கி­றார்.

சமூக நலன் சார்ந்த தனது கருத்து­களை சமூக வலைத்­த­ளங்­களில் வெளிப்­ப­டுத்த டாப்சி தயங்­கு­வது இல்லை. தமது இந்­தச் சமூ­கப் பணி தொடர்ந்து நீடிக்­கும் என்­கி­றார்.

, :   

டாப்சி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!