இந்திய சினிமாவில் அறிமுகமாகும் குத்துச்சண்டை சகாப்தம்

உலகப் புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரரான மைக் டைசன், 55, இந்தியத் திரைப்படம் ஒன்றில் நடிக்கவுள்ளார்.


விளையாட்டை மையமாகக்கொண்டு உருவாகும் ‘லைகர்’ திரைப்படத்தில் டைசன் நடிக்கிறார்.


இதனை அப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கரண் ஜோகர் தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


‘கிக்பாக்சர்’ வேடத்தில் விஜய் தேவரகொண்டா நாயகனாக நடிக்கும் இப்படம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது.


படத்தில் டைசனுக்கு கௌரவ வேடம் என்றும் படத்தின் இறுதிக் கட்டத்தில் அவரது கதாபாத்திரத்தை வைத்தே முக்கியத் திருப்பம் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. டைசன் பங்கேற்கும் காட்சிகளின் படப்பிடிப்பு கோவாவில் நடக்கவிருக்கிறது.


இதுகுறித்து, “வியப்பளிப்போம் என்று உறுதியளித்திருந்தோம்! இப்போது அதைத் தொடங்கி இருக்கிறோம். இந்தியத் திரையுலகில் முதன்முறையாக இணைகிறார் இப்புவியின் மோசமான மனிதர், குத்துச்சண்டைக் கடவுள், சகாப்தம், இரும்பு மனிதர் மைக் டைசன்,” என்று விஜய் தேவரகொண்டா தமது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!