‘மொத்தமாக மாறினார் ஜிவி’

தமிழ் சினி­மா­வில் இது­வரை சொல்­லப்­ப­டாத விஷ­யங்­களில் கவ­னம் செலுத்த விரும்­பு­வ­தா­கச் சொல்­கி­றார் அறி­முக இயக்­கு­நர் மதி­மாறன்.

இவர் வெற்­றி­மா­ற­னி­டம் உதவி இயக்­கு­ந­ரா­கப் பணி­யாற்­றி­ய­வர்.

'செல்ஃபி' என்ற வித்­தி­யா­ச­மான தலைப்­பு­டன் கள­மி­றங்கி உள்­ளார். ஜி.வி.பிர­காஷ்­தான் நாய­கன்.

சென்­னைக்கு அருகே உள்ள கட­லூர் பகு­தி­யைச் சேர்ந்த மாண­வன், பொறி­யி­யல் படிப்­புக்­காக சென்னை வரு­கி­றான். அவன் சந்­திக்­கும் பிரச்­சி­னை­கள்­தான் படத்­தின் அடிப்­ப­டை­யாம்.

கல்­லூரி மாண­வ­னுக்கு ஏற்ற தோற்­றம் இருப்­ப­தால் ஜி.வி.பிர­காஷை அணு­கி­ய­தாகச் சொல்­கி­றார் மதி­மா­றன்.

"பொது­வா­கப் பார்த்­தால் எளி­ய­வர்­கள்­தான் இங்கே அதி­கம் சிர­மப்­ப­டு­கி­றார்­கள். ஆனால் அனைத்­தை­யும் மீறி, வாழ்க்­கை­யைப் பற்­றிய ஒரு நம்­பிக்கை அனை­வர் மன­தி­லும் இருக்­கும். என்னை ஆச்­ச­ரி­யப்­ப­டுத்­திய விஷ­யங்­களில் இது­வும் ஒன்று.

"இந்த யதார்த்­தத்­தை­யும் கள நில­வ­ரத்­தை­யும் தன் நடிப்­பில் மிக கச்­சி­த­மா­கப் பிர­தி­ப­லித்­தார் ஜிவி.

"உண்­மையைச் சொல்­லும்­போது அதன் விளிம்பு வரை எட்­டிப் பார்க்­கும் முனைப்பு என்­னி­டம் எப்­போ­துமே இருக்­கும்.

"நேர்மை வெற்­றி­பெ­றுமா என்­பது தெரி­யாது. ஆனால் இந்த உல­கத்­துக்கு எது நியா­யம் என்­பது நன்கு தெரி­யும். இந்­தக் கருத்தை சொல்­வ­தற்கு ஜிவி உத­வி­க­ர­மாக இருந்­தார்," என்­கி­றார் மதி­மா­றன்.

ஜ.வி.பிர­கா­ஷி­டம் பல்­வேறு திற­மை­கள் ஒளிந்து கிடப்­ப­தா­கக் குறிப்­பி­டு­ப­வர், அவ­ரைத் தனது கதைக்கு ஏற்ற நாய­க­னாக மாற்­று­வ­தில் சிர­மம் ஏதும் ஏற்­ப­ட­வில்லை என்­கி­றார்.

"ஜிவிக்­குள் இருந்த இயக்­கு­நர் கௌதம் மேனன் போன்ற குணா­தி­ச­யத்தை அகற்­றி­விட்டு, லுங்கி கட்ட வைத்­தோம். பிறகு அவ­ரது நுனி­நாக்கு ஆங்­கி­லத்­தை­யும் உரு­வி­னோம். அதன் பிறகு சாதா­ரண, சரா­சரி இளை­ய­ராக கதைக்­குள் உல­வ­விட்­ட­போது, அவ­ருக்கே அனைத்­தும் பிடித்­துப்­போ­னது. அதன் பிறகு அவரே (ஜிவி) ஒவ்­வொரு விஷ­யம் குறித்­தும் ஆர்­வத்­து­டன் கேட்­ட­றிந்து, மிகுந்த ஈடு­பாட்­டு­டன் நடித்­தார். மொத்தமாக மாறிவிட்டார்.

"நாய­கி­யாக நடிப்­ப­வர் வர்ஷா பொல்­லமா. இவ­ருக்­கும் ஜிவிக்­கும் இடையே ஜோடிப் பொருத்­தம் நன்­றாக இருப்­ப­தாக படக்­கு­ழு­வில் உள்ள அனை­வ­ருமே கூறி­விட்­ட­னர். எனி­னும் ரசி­கர்­கள்­தான் உண்­மை­யான நடு­வர்­கள். அவர்­கள்­தான் இந்­தப் படத்­தில் எல்லா அம்­சங்­களும் நன்­றாக உள்­ள­னவா என்­பதை தீர்­மா­னிக்க வேண்­டும்," என்­கி­றார் அறி­முக இயக்­கு­நர் மதி­மா­றன்.

ஒட்­டு­மொத்த இந்­தி­யா­வி­லும் பார்க்­கும்­போது தமி­ழ­கத்­தில்­தான் கல்­விக்­கான கட்­ட­மைப்பு பல­மாக உள்­ள­தா­கக் குறிப்­பி­டு­ப­வர், இதன் கார­ண­மா­கவே வெளி­மா­நி­லங்­க­ளைச் சேர்ந்த ஏரா­ள­மா­னோர் தமி­ழ­கத்­தில் கல்வி கற்­ப­தா­கச் சுட்­டிக்­காட்­டு­கி­றார்.

"இப்­ப­டி­யான பெரு­மை­மிகு முகம் ஒரு­பக்­கம் இருக்க, மற்­றொரு பக்­கம் சில கறுப்­புப் பக்­கங்­களும் உள்­ளன. கல்வி சார்ந்த சில கறுப்பு அத்­தி­யா­யங்­களை தமி­ழ­கம் கடந்து வந்­தி­ருக்­கிறது. அது­போன்ற கறுப்­புப் பக்­கங்­களை வெளிச்­சம்­போட்டு காட்­டும் பட­மாக 'செல்ஃபி' இருக்­கும்," என்­கி­றார் மதி­மா­றன்.

தலைப்­புக்­கும் படத்­துக்­கும் என்ன தொடர்பு என்­பதை இப்­போதே விளக்­க­மு­டி­யாது என்று குறிப்­பி­டு­ப­வர், படம் துவங்­கி­ய­துமே இந்­தத் தொடர்பு ரசி­கர்­க­ளுக்­குப் புரி­யத் தொடங்­கும் என்­கி­றார்.

"சினிமா மூலம் பெரிய அள­வில் சமூக மாற்­றங்­க­ளைச் செய்­ய­மு­டி­யும் என்ற நம்­பிக்கை பெரி­தாக இல்லை. அதே­ச­ம­யம் நமது கருத்­து­களை நேர்­மை­யா­கப் பதிவு செய்ய வேண்­டும் என விரும்­பு­கி­றேன்.

"பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளைப் பற்­றிச் சொல்­லும்­போது கொஞ்­சம் தீவி­ரம் இருக்­கத்­தான் செய்­யும். அதைத் தவிர்க்க இயலாது. எனக்கும் தவிர்க்கத் தோணவில்லை.

"இங்கே இன்­ன­மும் சொல்­லப்­ப­டா­மல் இருக்­கும் விஷ­யங்­க­ளைச் சொல்ல நினைக்­கி­றேன். கல்­வி­யில் முன்­னோடி மாநி­ல­மாக தமிழ்­நாடு இருக்க சமூக நீதி­யும் இரு­மொ­ழிக் கொள்­கை­யுமே முக்­கி­யக் கார­ணம் என நம்­பு­கி­றேன். அவற்றை எல்­லாம் இந்­தப் படத்­தில் நிச்­ச­யம் சொல்­வேன்," என்­கி­றார் மதி­மா­றன்.

ஜி.வி.பிரகாஷ்

, :   

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!