‘பீஸ்ட்’ படத்தை வைத்து விஜய் புதுத்திட்டம்

'பீஸ்ட்' படத்­துக்­காக டெல்லி சென்ற விஜய் அங்­கி­ருந்து வெளி­நாடு செல்ல இருப்­ப­தாக வெளி­யான தக­வலை அவ­ரது தரப்பு மறுத்­துள்­ளது.

அண்­மைக்­கா­ல­மாக ஊட­கங்­களில் தன்­னைப் பற்­றி­யும் குடும்­பத்­தார் பற்­றி­யும் வெளி­வ­ரும் பொய்­யான தக­வல்­க­ளால் அவர் வருத்­தத்­தில் இருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

எனி­னும் இத்­த­கைய விவ­கா­ரங்­க­ளுக்கு மத்­தி­யில் தனது அடுத்த படம் குறித்த அறி­விப்பை வெளி­யி­டச் செய்­தது, அவர் எந்த அள­வுக்கு தொழில் ரீதி­யில் திட்­ட­மிட்­டுச் செயல்­ப­டு­கி­றார் என்­ப­தற்கு நல்ல உதா­ர­ணம் என்­கிறார்­கள் கோடம்­பாக்­கத்து விவ­ரப் புள்­ளி­கள்.

தனது அனு­ம­தி­யின்றி அர­சி­யல் களம் காண விஜய் மக்­கள் இயக்­கம் தொடங்­கப்­பட்­டதை அவர் விரும்­ப­வில்லை. இத­னால் பெற்­றோ­ருக்­கும் அவ­ருக்­கும் இடை­யே­யான உற­வில் விரி­சல் ஏற்­பட்­டது. இதை­ய­டுத்து அந்த இயக்­கம் மூடு விழா கண்­டது.

இதை­ய­டுத்து, வீடு தேடி வந்த பெற்­றோரை வீட்­டுக்­குள் விடா­மல் வெளியே நிற்க வைத்­தார் விஜய் என ஊட­கத்­தில் தக­வல் வெளி­யா­ன­தும் விஜய் ரசி­கர்­கள் அதிர்ச்சி அடைந்­த­னர். இது பொய்த் தக­வல் என்­பதை விஜய்­யின் தந்தை தெளிவு­ப­டுத்தி உள்­ளார்.

இத்­த­கைய சிக்­கல்­களை மறக்­க­டிக்­கும் வகை­யில் 'பீஸ்ட்' பட வெளி­யீடு இருக்க வேண்­டும் என முடிவு செய்­துள்­ளா­ராம் விஜய்.

திரை­ய­ரங்­கு­கள் முழு வீச்­சில் செயல்­படும் வேளை­யில் இப்­ப­டம் வெளி­யா­கும் என்­ப­தால் திரு­வி­ழா­வைப் போல் களை­கட்ட வேண்­டும் என்று தனது நெருக்­க­மான வட்­டத்­தில் இருப்­ப­வர்­க­ளி­டம் கூறி­யுள்­ள­தா­கத் தக­வல்.

இதற்­கி­டையே 'பீஸ்ட்' படத்­தின் வெளி­யீட்டு உரிமை முந்­தைய விஜய் படங்­க­ளைக் காட்­டி­லும் புதிய உச்­சத்தை தொடும் என விநி­யோ­கிப்­பா­ளர்­கள் மத்­தி­யில் பேசப்­படுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!