திரைத் துளிகள்

திரைத் துளிகள்

2 mins read
0f432b94-d2c8-450b-adfe-f0e1357442e6
-
multi-img1 of 2

சேதுபதி படத்தில் இந்திய அழகி

விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தில் 'மிஸ் இந்தியா' பட்டம் வென்ற அனு கீர்த்தி நாயகியாக நடிப்பது உறுதியாகி உள்ளது. படத்தின் இயக்குநர் பொன்ராம் இதை அறிவித்தார்.

'விஜேஎஸ் 46' என்று குறிப்பிடப்படும் இப்படத் துக்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. திண்டுக்கல் பகுதியை கதைக்களமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தில் காதல், நகைச்சுவை, அடிதடி என பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்திருக்கும் என்கிறார் பொன்ராம். டி.இமான் இசையமைக்கிறார். இந்நிலையில் முன்பே வெளியான தகவலின்படி 'மிஸ். இந்தியா' பட்டம் வென்ற அனு கீர்த்தியை நாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளனர்.

மயங்கி விழுந்த 'பவர் ஸ்டார்'

நடிகர் 'பவர் ஸ்டார்' சீனிவாசன் படப்பிடிப்பின் போது திடீரென மயங்கி விழுந்ததை அடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ரத்த அழுத்தத்தில் ஏற்பட்ட மாறுபாடு காரணமாக அவர் மயக்கமடைந்ததாக கூறப்படுகிறது.

ஏராளமான படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்துள்ள பவர் ஸ்டார் சீனிவாசன் இப்போது 'பிக்கப் டிராப்' என்ற படத்தின் கதையை எழுதியிருப்பதுடன் இயக்கியும் வருகிறார். இதில் வனிதா விஜயகுமார் அவரது ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

மீண்டும் இணையும் மூவர் கூட்டணி

'வலிமை' படத்தை தொடர்ந்து அஜித் நடிக்க உள்ள 'தல 61' படத்தையும் தானே தயாரிக்க உள்ளதாக போனி கபூர் அண்மைய பேட்டியில் தெரிவித்துள்ளார். அஜித்தை வைத்து ஏற்கெனவே அஜித் நடிப்பில் 'நேர்கொண்ட பார்வை', 'வலிமை' ஆகிய இரு படங்களை தயாரித்துள்ளார் இவர். மேலும் அஜித்தின் 61ஆவது படத்தையும் எச்.வினோத் தான் இயக்குவார் என்றும் போனி கபூர் கூறியுள்ளார். இதையடுத்து, போனி கபூர், வினோத்துடன் மீண்டும் இணைகிறார் அஜித்.