கணவர் நாக சைதன்யாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஹைதராபாத்தில் இருந்து இடம்பெயர்ந்து தாம் மும்பையில் குடியேறப் போவதாக வெளியான தகவல் உண்மை அல்ல என்று சமந்தா கூறியள்ளார்.
தமக்கு அப்படியோர் எண்ணமே இல்லை என்று சமூக வலைத்தளம் வழி ரசிகர்களுடன் உரையாடியபோது அவர் குறிப்பிட்டார்.
மேலும், தம்மைப் பற்றி எவ்வாறு வதந்திகள் பரவுகின்றன என்பது தெரியவில்லை என்று வருத்தத்துடன் குறிப்பிட்டார் சமந்தா.
"இனி எப்போதுமே ஹைதராபாத் தான் என் வீடு. எனக்கு அனைத்தையும் வழங்கிய அந்த நகரைப் பிரியமாட்டேன். கடைசி வரை இங்கு தான் வசிப்பேன்," என்று திட்டவட்டமாகத் தெரிவித்த அவர், இந்த கலந்துரையாடலின்போது, விவாகரத்து விவகாரம் குறித்த எந்த கேள்விக்கும் பதிலளிக்கவில்லை.

