‘மகளுக்குப் பிறந்தநாள் பரிசு’ ‘உலகளவில் இதுவே முதல் படமாக இருக்கும்’

இரண்டு ஆண்­டு­கள் உழைத்து உரு­வாக்­கிய திரைக்­க­தையை நம்பி 'முருங்­கைக்­காய் சிப்ஸ்' படத்தை இயக்­கி­ய­தா­கச் சொல்­கி­றார் அறிமுக இயக்­கு­நர் ஸ்ரீஜர்.

புது­ம­ணத் தம்­ப­தி­யர் திரு­ம­ணம் முடிந்த கையோடு எதிர்­கொள்­ளும் சில அனு­ப­வங்­களை சுவா­ர­சி­ய­மாகச் சொல்லி இருக்­கி­றா­ராம்.

"நாய­க­னுக்­கும் நாய­கிக்­கும் திரு­ம­ணம் நடக்­கிறது. முத­லி­ரவுக்­கான ஏற்­பா­டு­கள் நடக்­கும்­போது சுற்­றி­யுள்ள சிலர் சில நிபந்­த­னை­களை விதிக்­கி­றார்­கள். புது­ம­ணத் தம்­ப­தி­யர் அவற்­றைப் பின்­பற்­று­கிறார்­களா, என்ன நடக்­கிறது என்பது­தான் கதை.

"இப்­ப­டிப்­பட்ட கதைக்­க­ரு­வு­டன் உல­கத்­தில் முதன்­மு­றை­யாக உரு­வா­கும் படம் இது­வாகத்­தான் இருக்­கும். அதே­ச­ம­யம் இப்­ப­டி­யொரு கதை­யைக் கையாள்­வது அவ்­வ­ளவு எளி­தல்ல.

"இதற்கு முன்பு பாக்­ய­ராஜ் இயக்­கிய 'முந்­தானை முடிச்சு' படம் என்ன மாதிரி தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யதோ அது­போன்ற தாக்­கத்தை இந்­தப் பட­மும் ஏற்­ப­டுத்­தும். அவ்­வ­ளவு தர­மான படைப்­பாக உரு­வாகி உள்­ளது," என்­கி­றார் ஸ்ரீஜர்.

இப்­ப­டத்­தின் தயா­ரிப்­பா­ள­ரின் உத­வி­யோ­டு­தான் நடி­கர் சாந்­தனு­வி­டம் கதை சொன்­னா­ராம். இயக்­கு­நர் பாக்­ய­ராஜ் மகன் என்­ப­தால் சாந்­த­னு­வுக்­கும் திரைப்­பட இயக்­கம் தொடர்­பான பல்­வேறு நுணுக்­கங்­கள் தெரிந்­தி­ருப்­ப­தா­கச் சொல்­கி­றார்.

"நடிப்­பில் பாக்­ய­ராஜ் சாரை பின்­பற்­ற­லாம் என்று சொன்­ன­போது சாந்­தனு மறுத்­து­விட்­டார். நான் எனக்­கென தனி அடை­யா­ளத்தை உரு­வாக்க முயற்சி செய்து கொண்­டி­ருக்­கி­றேன். என்னை விட்­டு­வி­டுங்­கள் என்று கறா­ரா­கக் கூறி­விட்­டார். அவ­ரது நடிப்­பில் யாரு­டைய சாய­லும் இருக்­காது. நாய­கியை தேடிப்­பி­டிப்­பது சவா­லாக இருந்­தது. அப்­போது ஒரு நண்­பர் மூல­மாக அதுல்யா ரவி அறி­மு­க­மா­னார். சாந்­தனு, அதுல்யா இடை­யே­யான ஜோடிப்­பொ­ருத்­த­மும் உடல் மொழி­யும் அரு­மை­யாக அமைந்­து­விட்­ட­ன," என்­கி­றார் ஸ்ரீஜர்.

, :   

நகைச்­சுவை மூலம் கோடம்­பாக்­கத்­தில் தனக்­கென ஓரி­டத்­தைப் பிடித்­து­விட்ட நிலை­யில் 'நாய் சேகர்' படத்­தின் மூலம் கதா­நா­ய­க­னாக உயர்ந்­தி­ருக்­கி­றார் சதீஷ்.

அந்த உற்­சா­கம் ஒரு­பு­றம் இருக்க, ரஜி­னி­யுடன் நடித்­துள்ள 'அண்­ணாத்த' படம் எதிர்­வரும் தீபா­வளி தினத்­தில் வெளி­யா­கிறது. அன்­று­தான் சதீ­ஷின் மகள் நிகா­ரி­கா­வின் முதல் பிறந்­த­நாள்.

"ஒரு தந்­தை­யாக என் மக­ளுக்கு நான் அளிக்­கும் மிகச்­சி­றந்த பிறந்­த­நாள் பரிசு இது­தான். இது என்னை எந்த அள­வுக்கு மகிழ்ச்சி­ப்ப­டுத்­தும் என்­ப­தும் இந்­தப் பரி­சின் மதிப்பு குறித்­தும் வளர்ந்த பிறகு நிகா­ரி­கா­வுக்­குப் புரி­யும். என்­ன­தான் கதா­நா­ய­க­னாக நடிக்­கத் தொடங்­கி­விட்­டா­லும், நிச்­ச­யம் நகைச்­சு­வைக் கலை­ஞ­னா­க­வும் தொடர்ந்து நடிப்­பேன்," என்­கி­றார் சதீஷ்.

'அண்­ணாத்த' படம் குறித்த அதிகா­ர­பூர்வ அறி­விப்பு வெளி­யா­ன­தும், அந்­தப் படத்­தில் தனக்­கும் ஒரு கதா­பாத்­தி­ரம் இருப்­பது தெரி­யா­ம­லேயே ரஜி­னியை நேரில் சந்­தித்து வாழ்த்து தெரி­விக்­கச் சென்­றி­ருந்­தா­ராம்.

ரஜி­னி­யைப் பார்த்­த­தும், "தெறிக்க விடுங்க சார்..." என்று சதீஷ் வாழ்த்து தெரி­விக்க, அரு­கில் இருந்த இயக்­கு­நர் சிவா, "ஆமாம் சார்... தெறிக்க விட­லாம். உங்­க­ளுக்­கும் ஒரு கதா­பாத்­தி­ரம் இருக்­கிறது," என்று கூறி­ய­தும் ஆச்­ச­ரி­யத்­தில் மூழ்­கிப்­போ­ன­தா­கச் சொல்­கி­றார்.

"இந்­தப் படத்­துக்­கான கதையை எழு­தும்­போதே உங்­க­ளை­யும் மன­தில் வைத்து ஒரு பாத்­தி­ரத்தை உரு­வாக்­கி­னேன். நீங்­களும் நடிக்­கி­றீர்­கள். இது உறுதி என்­றார் இயக்­குநர் சிவா.

"ரஜினி சாரு­டன் இரு­பது நாள்­கள் படப்­பிடிப்­பில் பங்­கேற்­றேன். அவை மறக்க முடி­யாத நாள்­கள். அவ­ரைப் பற்றி பல தக­வல்­க­ளைப் பிறர் சொல்ல கேட்­கும்­போது வியப்­பாக இருக்­கும். ஆனால் அப்­ப­டிப்­பட்ட உச்ச நட்­சத்­தி­ர­மான அவரே தன்­னைப் பற்­றிய விஷ­யங்­க­ளைப் பகிர்ந்துகொள்­வ­தும் அதைக் கேட்­பதும் எல்­லா­ருக்­கும் கிடைக்­காத வாய்ப்பு.

"தன்னை பெரிய நட்­சத்­தி­ர­மா­கக் கரு­திக்­கொள்­ளா­மல் எளி­மை­யா­கப் பேசு­கி­றார் ரஜினி. அந்த அள­வுக்கு பக்­கு­வ­மான மனி­த­ராக அவர் உரு­வாகி இருக்­கி­றார்," என்­கி­றார் சிவா.

'நாய் சேகர்' படத்­த­லைப்பு தொடர்­பாக எழுந்த சிக்­கல் குறித்து பலர் இவ­ரி­டம் விசா­ரித்­துள்­ள­னர். மூத்த நகைச்­சுவை நடி­கர் என்ற முறை­யில் வடி­வே­லு­வுக்­காக தலைப்பை விட்­டுத் தந்­தி­ருக்­க­லாமே என்­று­தான் பெரும்­பாலா­ன­வர்­கள் கூறி­யுள்­ள­னர். அதற்­கான விளக்­கத்­தைப் பொறு­மை­யு­டன் விவ­ரிக்­கி­றார் சதீஷ்.

"கடந்த 2019ஆம் ஆண்டு எனக்­குத் திரு­ம­ண­மா­னது. அடுத்த ஐந்து தினங்­களில் இயக்­கு­நர் கிஷோர் என்­னைச் சந்­தித்து இந்­தக் கதை­யைச் சொன்­னார். அப்­போதே 'நாய் சேகர்' என்ற தலைப்­பைத்­தான் குறிப்­பிட்­டார்.

"படத்­த­யா­ரிப்பு நிறு­வ­னம் அனைத்து ஏற்­பா­டு­க­ளை­யும் செய்­யத் தொடங்­கி­ய­போது, இந்­தத் தலைப்பு தயா­ரிப்­பா­ளர் ஞான­வேல்­ரா­ஜா­வி­டம் இருப்­பதை அறிந்­தோம்.

"அவரை நானே தொடர்­பு­கொண்­டேன். எனக்கு அவ­ரி­டம் உள்ள உரி­மை­யில், 'டார்­லிங், இந்­தக் கதைக்கு இந்­தத் தலைப்பு பொருத்­த­மாக இருக்­கும்' என்று நான் சொன்­ன­தும், 'வைத்­துக் கொள்­ளுங்­கள் அன்பே' என்று சொல்லி அனு­மதி கொடுத்­தார்.

"கடந்த மே மாதம் என்­னு­டைய பிறந்­த­நா­ளை­யொட்டி படத்­தின் முதல்­தோற்­றச் சுவ­ரொட்­டியை தயார் செய்து­விட்ட போதி­லும், கொரோனா நெருக்­க­டி­யால் வெளி­யா­க­வில்லை.

"இப்­போது நிலைமை பர­வா­யில்லை என்­ப­தால் அந்­தச் சுவ­ரொட்­டியை வெளி­யி­ட­லாம் என்று முடிவு செய்­த­போ­து­தான், வடி­வேலு சார் படம் குறித்த அறி­விப்பு வெளி­யா­னது. நாங்­கள் முழுப் படத்­தை­யும் முடித்­து­விட்டு, கதைக்­குப் பொருத்­த­மான தலைப்பை வைத்­துள்­ளோம்.

"ஒரு­வேளை படப்­பி­டிப்புக்குப் போகும் முன்பே அவர்­கள் தலைப்­பைக் கேட்­டி­ருந்­தால் நிச்­ச­யம் கொடுத்­தி­ருப்­போம். நானும் வடி­வேலு சாரின் ரசி­கன்­தான். இந்­தத் தலைப்பை சொன்­ன­துமே அவ­ரது நினை­வு­தான் வரும். ஆனால் படத்தை முடித்­து­விட்­டோம் என்­ப­தால்­தான் தலைப்பு விஷ­யத்­தில் பிடி­வா­த­மாக இருக்­கி­றோம்," என்­கி­றார் சதீஷ்.

'நாய் சேகர்' படத்தை அடுத்து 'ஓ மை கோஸ்ட்' என்ற படத்­தி­லும் நாய­க­னாக நடிக்­கி­றார். இது முழு­நீள நகைச்­சு­வைப் பட­மாக உரு­வா­கிறது. தர்ஷா குப்தா நாய­கி­யாக நடிக்­கி­றார்.

"அடுத்­த­டுத்த படங்­களில் நாய­க­னாக நடிப்­ப­தால் இனி நகைச்­சுவை பக்­கம் திரும்­ப­மாட்­டேன் என்று முடிவு செய்­து­வி­டா­தீர்­கள். எனக்­கான நல்ல, பொருத்­த­மான கதை­கள் அமைந்­தால் மட்­டுமே நாய­க­னாக நடிப்­பேன். நகைச்­சுவை கதா­பாத்­தி­ரங்­க­ளி­லும் என்­னைப் பார்க்க இய­லும். இன்று வரை எனது வளர்ச்­சிக்­குத் துணை நின்ற அனை­வ­ருக்­கும் நன்றி சொல்ல கட­மைப்­பட்­டி­ருக்­கி­றேன்," என்­கி­றார் சதீஷ்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!