நாக சைதன்யாவை பிரிவதாக அறிவித்த சமந்தா

கணவர் நாக சைதன்யாவை பிரிவதாக நடிகை சமந்தாவும், மனைவி சமந்தாவை பிரிவதாக நாக சைதன்யாவும் சமூக ஊடகங்கள் வழியாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

நீண்ட யோசனைக்குப் பிறகு தாங்கள் இருவரும் பிரிந்து வேறு திசைகளை நோக்கிப் போவதாக சமந்தா, இன்ஸ்டகிராம் பதிவு ஒன்றில் குறிப்பிட்டார். பத்து ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துள்ள நட்பைப்  பெற்றது பேறு என்றும் அந்த நட்பே தங்களது உறவின் அடித்தளமாக இருப்பதாகவும் சமந்தா அந்தப் பதிவில் எழுதியுள்ளார்.  இந்த கடினமான காலகட்டத்தில் தாங்கள் இருவருக்கும் தேவையான தனிமையைத் தந்து ஆதரவாக இருக்கும்படி சமந்தா,  ரசிகர்கள், உற்றார் மற்றும் ஊடகத்துறையினரை கேட்டுக்கொண்டார்.

பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவுடன் 2010ஆம் ஆண்டு முதல் பழகி வந்த சமந்தா,  2017ல் அவரைத் திருமணம் செய்துகொண்டார்.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!