பிரம்மாண்ட இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், தேஜா நடிப்பில் உருவாகும் திரைப்படம் 'ஆர்.ஆர்.ஆர்.' இந்த படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தளபதி விஜய்யின் 'பீஸ்ட்' திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் திருநாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 'பீஸ்ட்' வெளியாகும் ஒரு வாரத்திற்கு முன்னரே 'ஆர்.ஆர்.ஆர்.' திரைப்படம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.