இயக்குநர் சிவா இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்துள்ள 'அண்ணாத்தே' படம் தீபாவளியன்று வெளியாகவுள்ளது. 'சன் பிக்சர்ஸ்' தயாரிப்பில் இமான் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் முதல் பாடல் திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு வெளியானது.
இந்தப் பாடலை மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியுள்ளார். ரஜினிக்காகஅவர் பாடிய பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன.
இந்தப் பாடல் வெளியானதும் அதுகுறித்து பேசிய ரஜினி, "45 ஆண்டுகள் என் குரலாக வாழ்ந்த
எஸ்.பி.பி. அவர்கள் 'அண்ணாத்தே' படத்தில் எனக்காகப் பாடிய பாடலின் படப்பிடிப்பின்போது, இதுதான் அவர் எனக்குப் பாடும் கடைசிப் பாடலாக இருக்கும் என்று நான் கனவில்கூட நினைக்கவில்லை. என் அன்பு எஸ்.பி.பி. தன் இனிய குரலின் வழியாக என்றும் நம்முடன் வாழ்ந்துகொண்டே இருப்பார்,'' என்று உருக்கமாகப் பேசியுள்ளார்.
குடும்பங்கள் கொண்டாடும் பொழுதுபோக்கு படமாக இந்தப் படத்தை உருவாக்கியுள்ளனர்.

