ஜோதிகாவைப் பாராட்டிய சூர்யா

ஜோதிகாவைப் பாராட்டிய சூர்யா

1 mins read
4646dbd4-1b67-4de1-8302-9e134c290432
-

சூர்யா தயாரிப்பில் அவரது மனைவி ஜோதிகா நடிப்பில் உருவாகி உள்ள படம் 'உடன்பிறப்பே'. குடும்ப உறவுகளைப்பற்றி குறிப்பாக அண்ணன் சசிகுமாருக்கும் கணவன் சமுத்திரகனிக்கும் இடையில் மாட்டிக்கொண்ட பாசக்கார பெண்ணை பற்றிய கதையாக உருவாகி உள்ளது.

ஜோதிகா பற்றி சூர்யா பேசும்போது, "1998ல் தரமணி பிலிம்சிட்டியில் இயக்குநர் வசந்த் ஒரு பாறைக்கு அருகில் ஜோதிகாவை எனக்கு அறிமுகப் படுத்தினார். வேறு ஊர், வேறு மொழியைத் தாண்டி இங்கு வந்து நம்மூர் மொழியைக் கற்று, தமிழ் மக்கள் மனதுக்குள் அவர் இடம்பிடித்துள்ளார்.

"வாழ்க்கையில் அவர் எடுக்கும் முடிவுகளை வியப்புடன் பார்க்கிறேன். ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன். நல்ல தோழியாக, மனைவியாக எனக்கு கிடைத்ததற்கு நன்றி. ஜோதிகாவின் 50வது படம் 'உடன்பிறப்பே'. மொத்த படக்குழுவும் உணர்வுபூர்வமாக நடித்துள்ளனர். படக்குழுவுக்கு என் வாழ்த்துகள்," என்றார்.