வசூலைக் குவிக்கும் 'ருத்ர தாண்டவம்'

1 mins read
532298a9-77b5-4c8c-8dc5-7049ee82b372
-

'திரௌபதி' படத்திற்குப் பிறகு மோகன், ரிச்சர்டு ரிஷி கூட்டணி இணைந்துள்ள படம் 'ருத்ர தாண்டவம்'. இந்தப் படத்தில் ரிச்சர்டு ரிஷிக்கு ஜோடியாக தர்ஷா குப்தா நடிக்க, இயக்குநர் கௌதம் மேனன் வில்லனாக மிரட்டியுள்ளார்.

படத்தைப் பற்றி கலவையான விமர்சனங்கள் வெளிவந்துள்ளன. இருப்பினும் படத்திற்கு ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் ஆதரவு அதிகமாக உள்ளது. அதனால் வசூலிலும் முன்னிலையில் உள்ளது. குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் படம் முதல் வார இறுதியில் தமிழகம் முழுவதும் சுமார் 7 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.