மகிழ்ச்சியின் உச்சத்தில் நாகசைதன்யா

சேகர் கம்­முலா இயக்­கத்­தில் நாக சைதன்யா, சாய் பல்­லவி உள்­ளிட்­டோர் நடித்த படம் 'லவ் ஸ்டோரி'. படம் வெளி­யான அன்றே உலக அள­வில் ரூ.10 கோடி வசூல் செய்­தி­ருக்­கிறது. கொரோனா இரண்­டாம் அலை ஓய்ந்த பிறகு வெளி­யான படங்­களில் முதல் நாளே அதி­கம் வசூல் செய்த படம் என்­ற பெரு­மையைப் பெற்­றி­ருக்­கிறது 'லவ் ஸ்டோரி'.

'லவ் ஸ்டோரி' படம் வசூல் வேட்டை நடத்தி வரு­வ­தால்­தான் நாக சைதன்யா மகிழ்ச்­சி­யில் இருக்­கி­றார்.

ஹைத­ரா­பாத்­தில் நடந்த 'லவ் ஸ்டோரி' பாராட்டு விழா­வில் கலந்­து­கொண்ட நாக சைதன்­யா­வின் தந்தை நாகார்­ஜுனா தன் மகனை முன்­னணி நடி­க­ராக்­கி­ய­தற்கு இயக்­கு­நர் சேகர் கம்­மு­லா­வுக்கு நன்றி தெரி­வித்­தார்.

காதல் கதை என்­ற­வு­டன், சாதி­ப் பாகு­பா­டு­கள், மத வேற்­று­மை­கள் என அதைச் சுற்றி மட்­டும் பேசா­மல் பெண் சுதந்­தி­ரம், பெண்­க­ளுக்­குச் சிறு­வ­ய­தில் நடக்­கும் பாலி­யல் சீண்­டல்­கள்

போன்­றவை குறித்து துணிந்து பேசி­ யி­ருக்கிறார் இயக்­கு­நர்.

கிரா­மத்­தி­லி­ருந்து ஹைத­ரா­பாத் வந்து 'ஜும்பா' உடற்­ப­யிற்சி கூடம் வைத்து வாழ்­வில் முன்­னே­றும் கன­வு­டன் இருக்­கும் இளை­ஞன் ரேவந்த். 'ஐடி' நிறு­வ­னத்­தில் வேலைக்­குச் சேர்ந்து குடும்­பத்­தி­ன­ரைச் சாரா­மல் வாழ அதே

ஹைத­ரா­பாத்­துக்கு வந்து ரேவந்­தின் பக்­கத்து வீட்­டி­லேயே குடி இருக்­கி­றார் மௌனிகா.

வேலை எது­வும் கிடைக்­கா­மல் போகவே தன்­னு­டைய அசாத்­திய

நட­னத் திற­மை­யால் ரேவந்த்­தின் உடற்­

ப­யிற்­சிக் கூடத்­தில் பங்குதாரராக இணை­கி­றார் மௌனிகா.

இரு­வ­ருக்­கும் இடை­யில் காத­லும் மலர, நடு­வில் அவர்­க­ளின் சாதி, மதம் பிரச்­சினை போதா­தென்று மௌனி­கா­வின் சிறு­வ­யது பிரச்­சி­னை­களும் வந்து நிற்­கின்­றன.

ரேவந்த்­தாக வரும் நாக சைதன்யா எப்­போ­தும்­போல சாக­சங்­கள் எது­வும் செய்­யா­மல் யதார்த்­த­மான நாய­க­னாக வலம் வரு­கி­றார். தன்­னு­டைய நட­னத்தை மெரு­கேற்றி காதல் நாய­க­னாக மட்­டுமே உலா வந்­தி­ருக்­கி­றார்.

ஒவ்­வொரு முறை­யும் பணத்­தே­வைக்­காக ஊரி­லி­ருக்­கும் தாயி­டம் சென்று திட்டு வாங்­கு­வ­தும் அடி­வாங்­கு­வ­து­மென நகைச்­சு­வை­யி­லும் கலக்கி இருக்கிறார். ஆனால், படத்­தில் நாக சைதன்­யாவைத் தூக்கி விழுங்கி ஏப்­பம் விடு­வது சாய் பல்­ல­வி­தான். இவர்­தான் படத்­தின் மிகப்­பெ­ரிய தூண். இய­லாமை, ஏமாற்­றம், பயம், தவிப்பு, கோபம், அழுகை என கலந்­து­கட்டி நடித்து பாராட்டுப் பெறு­

கி­றார்.

ஆட்­டோக்­கா­ர­ரி­டம் ஐந்து ரூபாயை விட மன­மில்­லா­மல் பேசும் முதல் காட்சி­யி­லி­ருந்து சாய் பல்­லவி மறைந்து மௌனிகா எனும் கதா­பாத்­தி­ரம்

மட்­டுமே தெரி­கிறது.

இரண்­டாம் பாதி­யில் வரும் 'சாரங்க டரியா' பாட­லில், நட­னத்­தில் வேறொரு தளத்­துக்­குச் சென்றிருக்­கி­றார். அதைப்­போல அவ­ருக்­குள் இருக்­கும் அந்த மறக்க முடி­யாத இறந்­த­கால பிரச்­சி­னை­யை­யும் கூடவே சுமந்துகொண்டு திரி­யும் பெண்­ணாக இயல்­பா­கவே வெற்றி நடை­போ­டு­கி­றார்.

முக்­கி­ய­மான இறு­திக் காட்­சி­யில் உயி­ருக்­குப் பயந்து ஓடிக்­கொண்­டி­ருக்­கை­யில் நாக சைதன்யா தன் அம்­மா­வி­டம் பேசும் வச­னங்­கள் அருமையாக இருப்பதாகக் கூறுகின்­ற­னர் படம் பார்த்­த­வர்­கள். சாதா­ர­ண­மாக தெலுங்கு படங்­களில் இது­போன்ற காட்­சி­கள் இருப்­பது மிக­வும் குறைவு.

சேகர் கம்­முலா இயக்­கிய 'கோதா­வரி', 'ஹேப்பி டேஸ்', 'லீடர்', 'ஃபிதா' போன்ற வெற்­றிப் படங்­க­ளின் வரி­சை­யில் 'லவ் ஸ்டோரி'யும் இணைந்து இருக்­கிறது.

சேகர் கம்­மு­லா­வின் முதல் பட­மான 'டாலர் ட்ரீம்ஸ்' படத்­திற்­காக சிறந்த அறி­முக இயக்­கு­ந­ருக்­கான தேசிய விருதைப் பெற்­றார். சேகர் கம்­முலா தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழி­களில் உரு­வா­கும் ஒரு படத்தை இயக்க இருக்­கி­றார். அதில் தனுஷ் நாய­க­னாக நடிக்க ஒப்­பந்­தம் செய்­யப்­பட்டு இருக்­கி­றார்.

இந்­நி­லை­யில் தான் போற்­றும் இயக்­கு­நர்­களில் ஒரு­வ­ரான சேகர் கம்­முலா இயக்­கத்­தில் நடிக்க இருப்­பது தனக்கு மிக­வும் மகிழ்ச்­சி­யாக இருப்­ப­தா­க­வும் அந்த நாளுக்­காக காத்­தி­ருப்­ப­தா­க­வும் நடி­கர் தனுஷ் டுவிட்­ட­ரில் பதி­விட்­டி­ருக்­கி­றார்.

இந்தப்­ ப­டத்­தில் நடிக்க தனுஷ் 50 கோடி ரூபாய் சம்­ப­ளம் பெறு­வ­தா­க­வும் சாய் பல்­ல­வி­தான் நாயகி என்­றும் கூறப்­ப­டு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!