தமிழ்த் திரையுலகில் ஒரு வார இடை
வெளியில் விஜய் சேதுபதி நடித்த 'லாபம்',
'துக்ளக் தர்பார்', 'அனபெல் சேதுபதி' ஆகிய மூன்று படங்கள் வெளியாகி உள்ளன. மேலும் இவர் கைவசம் 'காத்துவாக்குல ரெண்டு காதல்', 'முகிழ்', 'விக்ரம்', 'கடைசி விவசாயி', 'மாமனிதன்', 'மும்பைகார்', 'காந்தி டாக்ஸ்', 'மெர்ரி கிறிஸ்துமஸ்' ஆகிய படங்கள் உள்ளன.
இவை தவிர பாலிவுட்டில் ராஜ் மற்றும் டீகே இயக்கத்தில் உருவாகும் இணையத் தொடர் ஒன்றிலும் நடித்து வருகிறார்.
இயக்குநரும் நடிகருமான பாக்கியராஜ் ஒரு குறும்படத்திற்கான கதையை இவரிடம் கூறி இருக்கிறார். கதையைக் கேட்டதும் விஜய் சேதுபதியே அந்தக் குறும்படத்தில் நடிக்க சம்மதிப்பதாகவும் அதில் நடிப்பதற்கு தனக்கு சம்பளமே வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.
இதைப்போல இன்னும் நான்கு குறும் படங்களுக்கான கதையைத் தயார் செய்துவிட்டு அதிலும் பிரபல கதாநாயகர்களை நடிக்க வைத்து அதை ஒரு 'ஆந்தாலஜி' படமாக வெளியிடத் திட்டமிட்டி ருக்கிறார் பாக்யராஜ்.

