'பாகுபலி' பிரபாஸின் 25வது படம் எட்டு மொழிகளில் உருவாகிறது

'பாகுபலி' பிரபாஸின் 25வது படம் எட்டு மொழிகளில் உருவாகிறது

1 mins read
bebf3a48-5ceb-4ce9-b701-998fe70d26f0
-

'பாகுபலி' பிரபாஸ் நடிக்கும் புதிய படம் ஒரே சமயத்தில் எட்டு மொழிகளில் தயாராக உள்ளது. இது அவரது இருபத்து ஐந்தாவது படம். 'ஸ்பிரிட்' எனத் தலைப்பு வைத்துள்ளனர்.

சந்தீப் ரெட்டி வங்கா இயக்க உள் ளார். இவர் தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற 'அர்ஜுன் ரெட்டி' படத்தை இயக்கியவர்.

பூஷன் குமார் தயாரிக்கும் இப்படத்துக்காக பிரபாஸ் பெற்றுள்ள சம்பளம் தென்னிந்தியாவில் இதுவரை யாரும் வாங்காத சம்பளம் எனக் கூறப்படுகிறது.

தற்போது 'ராதே ஷ்யாம்', 'ஆதிபுருஷ்', 'சலார்' போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார் பிரபாஸ். மூன்று படங்களும் அடுத்த ஆண்டு வரிசையாக வெளியீடு காண உள்ளன.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் தயாராகும் 'ஸ்பிரிட்' படம் குறித்த மேலதிக தகவல்களை விரைவில் வெளியிட உள்ளனர்.

கதாநாயகி யார் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். பூஜா ஹெக்டே, ராஷ்மிகா மந்தனா, ராஷி கண்ணா எனப் பல முன்னணி நடிகைகளின் பெயர் அடிபட்டா லும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை என்பதால் எதையும் நம்ப வேண்டாம் என்று பிரபாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்புதிய படம் குறித்து பிரபாஸ் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் மிகுந்த உற்சாகத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.