விஜய் சேதுபதியின் மகள் நடித்துள்ள 'முகிழ்'

1 mins read
fbe1ba37-38c0-40cf-ab47-2672f66a0507
-

தமிழ்த் திரை­யு­ல­கில் முன்­னணி நடி­க­ராக இருக்­கும் விஜய் சேது­ப­தி­யும் அவ­ரது மகள் ஸ்ரீஜா­வும் இணைந்து நடித்­துள்ள திரைப்­ப­டம் 'முகிழ்'.

அறி­முக இயக்­கு­நர் கார்த்­திக் இயக்­கி­யுள்ள இப்­ப­டத்­தில் விஜய் சேது­பதி, ரெஜினா கசாண்ட்ரா, ஸ்ரீஜா உள்­ளிட்­டோர் முதன்மைக் கதா­பாத்­தி­ரத்­தில் நடித்­துள்­ளனர்.

இந்தப் படத்தில் ஒரு நாய்க்குட்டியும் நடித்துள்ளது. இப்­ப­டத்­திற்கு ரேவா என்ற பெண் இசை­ய­மைத்­துள்­ளார். சத்யா ஒளிப்­ப­திவு செய்­துள்ள இப்­ப­டத்­திற்கு கோவிந்­த­ராஜ் படத்­தொ­குப்­பா­ள­ராக பணி­யாற்­றி­யுள்­ளார்.

62 நிமிட நீள­முள்ள ஒரு யதார்த்­த­மான அணு­கு­மு­றை­யு­டன் கூடிய

குழந்­தை­க­ளுக்­கான பட­மாக இப்­ப­டம் உரு­வா­கி­யுள்­ளது. இந்­தப் படத்­தில் 12 வயது சிறு­மி­யாக ஸ்ரீஜா­வும் அவ­ரது பெற்­றோ­ராக விஜய் சேது­ப­தி­யும் ரெஜினா கசாண்ட்­ரா­வும் நடித்­துள்­ள­னர்.

அண்­மை­யில் இப்­ப­டத்­தின் முதல் பாடல் வெளி­யாகி நல்ல வர­வேற்பை பெற்­றது. அதை­ய­டுத்து இப்­ப­டம் நேற்று திரை­ய­ரங்­கு­களில் வெளி­யா­னது.

முதன்மு­றை­யாக 62 நிமி­டங்­களைக் கொண்ட இப்­ப­டம் திரை­ய­ரங்­கில் வெளி­யா­க­வுள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது.

இந்­நி­லை­யில் இப்­ப­டத்­தின் முன்­னோட்­டக் காட்­சி­யைப் படக்­குழு அண்மையில் வெளி­யிட்டது. தனது மக­ளு­டன் விஜய் சேது­பதி இடம்­பெற்­றுள்ள காட்­சி­கள் அதில் இடம்­பெற்­றுள்­ளன. இந்த முன்­னோட்­டக் காட்­சிக்கு ரசி­கர்­க­ளி­டையே நல்ல வர­வேற்பு இருந்­தது குறிப்­பி­டத்­தக்­கது.

கடந்த இரண்டு மாதங்களில் வெளியான விஜய் சேது­ப­தி­யின் படங்­கள் எது­வும் சொல்­லிக்­கொள்­ளும் வகை­யில் இல்லை. இந்­தப் பட­மா­வது வெற்றி பெறுமா என பொறுத்­தி­ருந்து பார்க்­க­லாம் என்­கிறது கோலி­வுட்.