ஆதி: திறமைதான் முக்கியம்

ஆதி: திறமைதான் முக்கியம்

3 mins read
e6a1ba45-877d-4cbc-8778-aac7d343dfea
-

"என்­னைப் பொறுத்­த­வ­ரை­யில் திற­மை­தான் முக்­கி­யம். திறமை இருந்­தால் எதை­யும் சாதிக்க முடி­யும்," என்­கி­றார் ஹிப்­ஹாப் ஆதி தமிழா.

அண்­மை­யில் இவ­ரது இயக்­கத்­தில் உரு­வான 'சிவ­கு­மா­ரின் சப­தம்' படத்­தைப் பார்த்த பெரும்­பா­லா­னோர் நன்­றாக உள்­ளது எனப் பாராட்டு தெரி­வித்­துள்­ள­னர். இத­னால் கிடைக்­கும் மன­நி­றை­வுக்கு ஈடா­னது எது­வுமே இல்லை என்று உற்­சா­க­மா­கப் பேசு­கி­றார் ஆதி.

"இந்­தப் படத்­தில் 13 புது முகங்­களை அறி­மு­கப்­ப­டுத்தி உள்­ளோம். 'மீசைய முறுக்கு' படத்­தி­லா­வது விவேக் சார், 'யு டியூப்' பிர­ப­லங்­கள் என ரசி­கர்­க­ளுக்­குத் தெரிந்த சில முகங்­கள் இருந்­த­னர். ஆனால் இம்­முறை அனை­வ­ருமே புது முகங்­கள்­தான். அனை­வ­ருமே திற­மை­சா­லி­கள். அத­னால் திற­மையை மட்­டுமே நம்பி கள­மி­றங்­கி­யுள்­ளோம்," என்­கி­றார் ஆதி.

அதே­போல் தனது படங்­களில் தமிழ் பேசும் பெண்­கள்­தான் கதா­நா­ய­கி­யாக நடிக்க வேண்­டும் என்­ப­தி­லும் உறு­தி­யாக உள்­ளார். ஆத்­மிகா தொடங்கி சிவ­கு­மார் சப­தம் மாதுரி வரை ஆதி­யு­டன் இணைந்து நடித்த அனைத்து நாய­கி­க­ளுக்­கும் நன்­றா­கத் தமிழ் பேச வரும்.

அண்­மை­யில் தனி­யார் தொலைக்­காட்­சி­யில் ஒளி­யே­றிய இளம் பாட­கர்­க­ளுக்­கான போட்­டி­யில் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்து கொண்­டார் ஆதி. அப்­போது இளம் பாட­கர்­கள் அனை­வ­ரை­யும் வெகு­வா­கப் பாராட்டி உற்­சா­க­மூட்­டி­னார். மேலும், அவர்­களில் ஒரு­வ­ருக்கு தனது இசை­யில் பாடு­வ­தற்கு வாய்ப்பு அளிப்­ப­தா­க­வும் அறி­வித்­தார்.

அவ­ரது இந்­தச் செய­லுக்கு சமூக வலைத்­த­ளங்­களில் பாராட்­டு­கள் குவி­கின்­றன. திற­மை­சா­லி­கள் எனத் தெரிந்து அவர்­களை ஊக்­கு­விப்­ப­தில் தயக்­கமோ தாம­தமோ கூடாது என்­ப­து­தான் தமது கொள்கை என்­கி­றார் ஆதி.

"கலைக்­கும் கலை­ஞ­னுக்­கும் தவறு, சரி எனும் வரை­ய­றை­கள் ஏதும் கிடை­யாது. ஒவ்­வொரு கற்­ப­னைக்­கும் கலை­ஞன்­தான் பொறுப்பு. சரி, தவறு என்­கிற கோட்­பாட்­டுக்­குள் கலை­யைக் கொண்டு வந்­தால் அது கலையே கிடை­யாது.

"என்­னைப் பொறுத்­த­வ­ரைக்­கும் என் கற்­பனை எனக்கு சரி­யா­னது. அப்­ப­டித்­தான் ஒவ்­வொரு கலை­ஞ­னுக்­கும். திரை­யு­ல­கில் எதை மாற்ற வேண்­டும், எதை சரி­ப­டுத்த வேண்­டும் என்­கிற ஆராய்ச்­சி­யில் எல்­லாம் நான் ஈடு­ப­ட­வில்லை. எதை­யும் சரி செய்­யும் அள­வுக்கு நான் வள­ர­வில்லை. இங்கு சரி­செய்ய வேண்­டிய அள­வுக்கு எந்­தப் பிரச்­சி­னை­யும் இல்லை," என்று நறுக்­குத் தெறித்­தாற்­போல் பேசும் ஆதி, அடுத்து 'அன்­ப­றிவு', தெலுங்­கில் 'ஏஜென்ட்' ஆகிய இரு படங்­க­ளுக்கு இசை­ய­மைக்க உள்­ளார்.

'சிவ­கு­மார் சப­தம்' படத்­தில் இடம்­பெற்ற 'சிவ­கு­மார் பொண்­டாட்டி' என்­கிற பாட­லுக்­கும் எதிர்ப்­பு­கள் கிளம்­பி­ய­தாக வெளி­வந்த தக­வல் உண்­மை­யல்ல என்­ப­வர், எந்­த­வித சர்ச்­சை­யும் எழ­வில்லை என்­கி­றார்.

அந்­தப் பாடல் இடம்­பெ­று­வ­தற்­கான கார­ணம் ரசி­கர்­க­ளுக்கு நிச்­ச­யம் புரிந்­தி­ருக்­கும் என்­றும் கதைக்கு ஏற்ப அமைந்த பாடல் என்­ப­தால் எதிர்ப்­ப­தற்கு அதில் ஒன்­றும் இல்லை என்­றும் ஆதி கூறு­கி­றார்.

"அடுத்து என்ன என்று எல்­லா­ருமே கேட்­கி­றார்­கள். இசைத் தொகுப்­பு­கள் வெளி­யீடு, பாடல் உரு­வாக்­கம், இசைக் குழுவை வழி­நடத்­து­வது என ஏதா­வது ஒரு வேலை­யில் தொடர்ந்து ஈடு­ப­டு­கி­றேன். திரை­யில் ஐந்து நிமி­டங்­கள் மட்­டுமே இடம்­பெ­றும் ஒரு பாட­லுக்­காக எந்த அளவு மெனக்­கெ­டு­கி­றோம் என்று யோசித்­துப் பார்த்­தேன். அதை­விட கொஞ்­சம் அதி­க­மாக உழைக்க முடிவு செய்­த­போது படங்­களை இயக்­கும் துணிச்­சல் வந்­தது.

"ஒரு கலை­ஞ­னாக மக்­களை மகிழ்­விக்க முடி­யும் எனும் நம்­பிக்கை எனக்கு எப்­போ­துமே உண்டு. இது­போன்று நான் விரும்­பிய அனைத்­தை­யும் ஒவ்­வொன்­றாக செய்து, மன நிறைவு கொள்­கி­றேன்," என்­கி­றார் ஆதி.

'ஓடிடி' தளங்­களில் தமக்கு ஆர்­வம் இல்லை என்று கூறப்­ப­டு­வது சரி­யல்ல என்­றும் திரை­ய­ரங்­கு­களில் படம் பார்ப்­ப­தில்­தான் தமக்கு ஆர்­வம் அதி­கம் என்­றும் அண்­மைய பேட்­டி­யில் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

"ஓடி­டியை நான் எதிர்க்­க­வில்லை. அது சூழ­லுக்­கான தொழில்­நுட்­பம். என்­னைக் கேட்­டால் ஓட்டி ஓட்டி பார்ப்­ப­பது ஓடிடி. மாறாக, ஒரே இடத்­தில் அமர்ந்து படம் பார்ப்­ப­து­தான் திரை­ய­ரங்­கம். எனக்கு திரை­ய­ரங்­கம் பிடித்­தி­ருக்­கிறது," என்­கி­றார் ஆதி.