காதலில் விழுந்தார் ரகுல்

1 mins read
c667f80a-7c58-441b-9e9b-1d855408626e
-

தமிழ், தெலுங்கு, இந்திப் படங்களில் நடித்து வரும் ரகுல் ப்ரீத் சிங் திங்கட்கிழமை தன்னுடைய 31வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்குத் திரையுலகப் பிரபலங்களும் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் பாலிவுட் நடிகரும் தயாரிப்பாளருமான ஜாக்கி பாக்னானி, ரகுலுடன் தான் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டகிராமில் வெளியிட்டு, "நீ இல்லாமல் நாட்கள் நாட்களாக இல்லை. நீ இல்லாமல் சுவையான உணவை சாப்பிடக்கூட பிடிக்கவில்லை. என் உலகமாக இருக்கும் மிக அழகான ஆத்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்," என்று பதிவிட்டிருந்தார்.

அதற்கு ரகுல், "நன்றி என் காதலரே. நீதான் இந்த ஆண்டு எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு. என் வாழ்க்கையை அழகாக்கியதற்கு, என்னைத் தொடர்ந்து சிரிக்க வைப்பதற்கு,

நீ நீயாக இருப்பதற்கு நன்றி," என்று பதிவிட்டு இருந்தார்.

தற்பொழுது ஜாக்கி பாக்னானி தயாரித்து வரும் படத்தில் நடித்து வருகிறார் ரகுல் ப்ரீத் சிங்.