‘காயங்களுடன் நடித்த அஜித்’

'வலிமை'யில் அஜித்­துக்கு இரட்டை வேடங்­கள், இது பைக் பந்­த­யத்தை மைய­மாக வைத்து உரு­வா­கும் படம் எனப் பல­வி­த­மான தக­வல்­கள் வெளி­வந்த வண்­ணம் உள்­ளன.

ஆனால் இவை எது­வுமே உண்­மை­யல்ல என்கிறார் இயக்­கு­நர் வினோத்.

இன்று மக்­களை அதி­கம் பாதிக்­கும் இரண்டு பிரச்­சி­னை­கள் குறித்து அல­சு­கிறது 'வலிமை'.

அவ்­விரு பிரச்­சி­னை­களும் அஜித்­தின் வீட்­டி­லும் நுழை­கின்­றன. அவற்றை அவர் எப்­ப­டிச் சமா­ளித்து வெற்­றி ­பெ­று­கி­றார் என்­ப­து­தான் கதை­யாம்.

"எனது முந்­தைய இரு படங்­களில் ஏற்­கெ­னவே நடந்த பிரச்­சி­னை­கள் குறித்து அலசி இருப்­பேன். எதிர்­கா­லத்­தில் என்ன மாதி­ரி­யான குற்­றங்­கள் நடக்க வாய்ப்­புள்­ளது என்­பதை கொஞ்­சம் கற்­பனை கலந்து அல­சி­யுள்­ளேன். மேலும் நான் உற்­றுக் கவ­னிக்­கும் ஒரு சமூ­கப் பிரச்­சினை குறித்­தும் விளக்கி உள்­ளேன்.

"இந்­தப் படத்­தி­லும் சால்ட் அண்ட் பெப்­பர் சிகை­ய­லங்­கா­ரத்­து­டன் திரை­யில் தோன்­றப்­போ­கி­றார் அஜித். கதை­தான் அவரை இவ்­வாறு திரை­யில் தோன்­றச் செய்­கிறது.

"நம் வீட்­டில் தந்­தையோ, அண்­ணனோ, தம்­பியோ காவல்­துறை அதி­கா­ரி­யாக இருந்­தால் எப்­படி இயல்­பாக இருப்­பார்­களோ, அப்­படித்­தான் அஜித்­தும் இந்­தப் படத்­தில் வலம் வரு­வார்.

"மிக ஜாலி­யான ஒரு மனி­த­ராக காட்சி தரு­ப­வர், ஒரு பிரச்­சினை என்று வரும்­போது, உடனே அதற்­கான கார­ணத்­தைக் கண்­ட­றிந்து, ஆணி­வேர் வரை சென்று தீர்­வை­யும் சொல்­லும் அதி­ர­டி­யான செயல்­பாடு கொண்ட காவல்­துறை அதி­கா­ரி­யாக முத்­திரை பதித்­துள்­ளார் அஜித்," என்­கி­றார் இயக்­கு­நர் வினோத்.

படம் குறித்த முக்­கி­ய­மான தக­வல்­கள் எதை­யும் ஏன் வெளி­யி­ட­வில்லை என்று ரசி­கர்­கள் கோப­ம­டைந்­த­தில் நியா­யம் உள்­ளது என்­றா­லும், சூழ்­நிலை­தான் இதற்­குக் கார­ணம் என்­றும் வேண்டு­மென்றே இவ்­வாறு செய்­ய­வில்லை என்­றும் விளக்­கம் அளிக்­கி­றார்.

கொரோனா விவ­கா­ரத்­தால் படப்­பி­டிப்பு பாதிக்­கப்­பட்­ட­தா­கக் குறிப்­பி­டு­ப­வர், மூன்று முக்­கிய கதா­பாத்­தி­ரங்­களை ஏற்­றுள்ள மூன்று நடி­கர்­களும் தொற்­றுப் பர­வல் கட்­டுக்­குள் வந்த பிறகே படப்­பி­டிப்­பில் பங்­கேற்க முடி­யும் என்று கூறி­விட்­ட­தா­கச் சொல்­கி­றார்.

"தவிர, இரண்டு நடி­கை­கள் தாய்மை அடைந்த கார­ணத்­தால் நிலைமை சிக்­க­லா­னது. வெளி­நா­டு­களில் எடுக்­கப்­பட வேண்­டிய காட்­சி­க­ளை­யும் உரிய நேரத்­தில் பட­மாக்க முடி­ய­வில்லை.

"சில­ருக்­காக காத்­தி­ருப்­பதா, அல்­லது புதி­ய­வர்­களை வைத்து மீண்­டும் காட்­சி­களை எடுப்­பதா என்று முடிவு செய்­வதே பெரிய வேலை­யா­கி­விட்­டது. கால­மும் விர­ய­மா­னது," என்­கி­றார் வினோத்.

இதில் இரு­சக்­கர வாகன பந்­தய வீர­ராக நடித்­துள்­ளாரா?

"படத்­தில் மூன்று பைக் துரத்­தல் காட்­சி­கள் இடம்­பெற்­றுள்­ளன. தொழில்­முறை பந்­த­யங்­களில் பங்­கேற்­கா­விட்­டா­லும் அஜித் இன்­ன­மும் பைக் ஓட்டு­வ­தில் ஆர்­வம் காட்டி வரு­கி­றார். அவ்­வப்­போது பைக்­கில் நீண்­ட­தூரப் பய­ணங்­களும் மேற்­கொள்­கி­றார்.

"கதைக்கு தேவைப்­பட்­ட­தால்­தான் பைக் துரத்­தல் காட்­சி­களை வைத்­துள்­ளோம். அதற்­காக ஆபத்­து­க­ளைப் பொருட்­படுத்­தா­மல் நடித்­தார் அஜித்.

"இப்­ப­டிப்­பட்ட அர்ப்­ப­ணிப்­புள்ள கலை­ஞர்­கள் ரொம்­பக் குறைவு," என்­கி­றார்் வினோத்.

ஹைத­ரா­பாத்­தில் படப்­பி­டிப்பு நடந்­த­போது பைக்­கில் இருந்து கீழே விழுந்து அஜித்­துக்கு பலத்த காயங்­கள் ஏற்­பட்­ட­ன­வாம்.

இதை நினைத்து படக்­கு­ழு­வி­னர் கவ­லைப்­பட அஜித்தோ, பைக் பாகங்­கள் உடைந்து போனதை நினைத்து வருத்­தப்­பட்­டுள்­ளார்.

"கார­ணம் அந்த பைக் இல்­லா­மல் படப்­பி­டிப்பை தொடர முடி­யாது என்ற நிலை.

"ஆனால் என்ன மாயமோ தெரி­ய­வில்லை. மறு­நாள் 18 லட்­சம் ரூபாய் மதிப்­புள்ள புதிய பைக் ஒன்றை வர­வ­ழைத்­து­விட்­டார் அஜித்.

"உடல் முழு­வ­தும் காயங்­கள் இருந்த நிலை­யி­லும், படப்­பி­டிப்­பில் அவர் பங்­கேற்­ற­தைக் கண்டு மொத்­தப் படக்­கு­ழு­வும் நெகிழ்ந்து போனது," என்­கி­றார் இயக்­கு­நர் வினோத்.

'வலிமை' வரும் ஜனவரியில் வெளியாகிறது. ஆனால் ரசிகர்கள் இந்தத் தகவலை வைத்து இப்போதே கொண்டாடத் தொடங்கிவிட்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!