‘பாசத்தை பொழியும் அண்ணாத்த’

'அண்­ணாத்த' படத்­தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் ஆகிய மூவ­ரும் ஏற்­றுள்ள கதா­பாத்­தி­ரங்­கள் குறித்த விவ­ரங்­கள் தெரியவந்­துள்­ளன.

கதைப்­படி, ரஜி­னி­யின் காதலி­யாக நடித்­துள்­ளார் நயன்­தாரா. ரஜி­னி­யின் இளைய சகோ­த­ரி­களாக குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் நடித்­துள்­ள­னர்.

இது அண்­ணன், தங்கை பாசத்தை மைய­மாக வைத்து உரு­வா­கி­யுள்ள படம் என்­றும் நிறைய உணர்­வு­பூர்­வ­மான காட்சி­கள் உள்­ளன என்­றும் படக்­குழு தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அதே­ச­ம­யம் ரஜினி படங்­க­ளுக்கே உரிய அதி­ரடி, நகைச்­சுவை ஆகிய அம்­சங்­களும் குறை­வின்றி இருக்­கும்.

இந்நிலையில் இப்படத்தின் குறு முன்னோட்டக் காட்சித் தொகுப்பு (டீசர்) நாளை வெளியாகிறது. இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள் ளனர். 'அண்ணாத்த' நவம்பர் 4ஆம் தேதி வெளியாகிறது.

இதற்கிடையே, 'அண்ணாத்த' படத்தின் வசூல் ரஜினியின் முந்தைய படங்கள் நிகழ்த்திய சாதனைகளை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படம் ரஜினிக்கு மனநிறைவு தரும் வகையில் உருவாகி உள்ளதாம்.

, :   

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!