'பொன்னியின் செல்வன்' படத்துக்காக சொந்தக் குரலில் வசனங்களைப் பேசி உள்ளார் திரிஷா.
இதற்கு முன்பு 'மங்காத்தா', 'மன்மதன் அம்பு' உள்ளிட்ட சில படங்களில் மட்டுமே அவர் பின்னணிக் குரல் கொடுத்துள்ளார்.
'பொன்னியின் செல்வன்' தமது திரைப் பயணத்தின் முக்கியமான படம் என்பதால் தாமே பின்னணிக் குரல் கொடுப்பதாக படத்தின் இயக்குநர் மணிரத்னத்திடம் கூறினாராம். "தொழில்நுட்பப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. மிக விரைவில் பெரிய அறிவிப்பை எதிர்பார்க்கலாம்," என்று தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார் திரிஷா.

