இன்று திரையரங்குகளில் ‘அரண்மனை 3’

சுந்­தர்.சி இயக்­கத்­தில் ஆர்யா நடிப்­பில் உரு­வா­கி­யி­ருக்­கும்

'அரண்­மனை 3' திரைப்­ப­டம் இன்று பிர­ம்மாண்­ட­மாக திரை­ய­ரங்­கு­களில் வெளி­யாகி உள்­ளது. இந்­தப் படத்தை உத­ய­நிதி

ஸ்டா­லி­னின் 'ரெட் ஜெயன்ட் மூவீஸ்' நிறு­வ­னம் வெளி­யிட்­டது.

இந்­தப் படம் பற்றி செய்­தி­யா­ளர்­கள் சந்­திப்­பில் பேசிய

நாய­கன் ஆர்யா, "படப்­பி­டிப்பு காலை 7 மணிக்­கெல்­லாம் தொடங்கி­வி­டும். இரண்டு மூன்று இடங்­களில் ஒரே நேரத்­தில் படப்­பி­டிப்பு நடக்­கும். அனைத்து நடி­கர்­களும் ஒரே இடத்­தில் இருந்­தா­லும் அவர்­க­ளி­டத்­தில் நகைச்­சு­வை­யா­கப் பேசி வேலை செய்வதே தெரி­யா­மல் வேலை வாங்கிவிடு­வார் இயக்­கு­நர் சுந்தர்.சி.

"காலை 7 மணிக்குத் தொடங்­கிய படப்­பி­டிப்பு இரவு 10 மணிக்கு மேல் நடந்­தா­லும் வேலை செய்­தது போலவே இருக்­காது. அந்த அள­வுக்கு அவர் எங்­களை நகைச்­சு­வை­யா­கப் பேசி வேலை­யில் ஈடு­பட வைக்­கும் திறமை கொண்­ட­வர்.

"நடி­கர் விவேக்­கு­டன் நீண்ட நாட்­க­ளாக நடிக்­க­வேண்­டும் என்று நினைத்­தி­ருந்­தேன். அந்த ஆசை இந்­தப் படத்­தில் நிறை­வே­றி­யது. அவர் ஒரு மாமேதை. அவ­ரு­டன் நடிக்க வைத்த சுந்­தர்.சிக்கு இந்த நேரத்­தில் நன்­றி­யைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன். அவ­ரின் இழப்பு என்னை மிக­வும்

பாதித்­து­விட்­டது. அவ­ரு­டைய இறு­திப் பட­மாக

'அரண்­மனை 3' படம் அமை­யும் என்று நான் கன­வி­லும் நினைக்­க­வில்லை.

"அத்துடன் நான் நடித்த 'பாஸ் என்ற பாஸ்­க­ரன்',

'மத­ரா­ச­பட்­டி­னம்' படங்­களை அடுத்து 'அரண்­மனை 3' படத்தையும் உத­ய­நிதி வெளி­யி­டு­கி­றார். அதற்கு

அவ­ருக்கு நான் நன்றி சொல்லிக்கொள்கிறேன்.

"தற்­பொ­ழுது பார்­வை­யா­ளர்­கள் திரை­ய­ரங்­கு­

க­ளுக்­குச் சென்று படம் பார்க்­கத் தொடங்கி

இருக்­கி­றார்­கள். இது மிக­வும் மகிழ்ச்­சி­யான செய்தி. அண்­மை­யில் வெளி­யான 'டாக்­டர்' படத்­திற்கு நல்ல வர­வேற்பு கிடைத்­துள்­ளது. அது­போல் 'அரண்­மனை 3' படத்­தை­யும் திரை­ய­ரங்­கு­களில் பார்க்க பார்­வை­யா­ளர்­கள் வரு­வார்­கள் என்று எதிர்­பார்க்­கி­றேன்," என்று கூறி­யுள்­ளார்.

படத்­தின் இயக்­கு­நர் சுந்­தர்.சி பேசு­கை­யில், "எல்­லோ­ரும் 'அரண்­மனை' படங்­களை எளி­தாக எடுத்துவிடு­கி­றீர்­கள் என்று சொல்­வார்­கள். இந்த மாதி­ரி­யான படங்­களை மக்­கள் விரும்­பு­ம் வகையில் கொடுப்­பது மிக­வும்

கஷ்­டம்.

"ஏற்­கெ­னவே உள்ள விஷ­யங்­க­ளை­விட கொஞ்­சம் மாறு­பட்­ட­தாக இருக்­க­வேண்­டும். 'அரண்­மனை' படத்­தின் இரண்டு பாகங்­க­ளுமே நல்ல வசூ­லை­யும் வெற்­றி­யையும்

தந்­தது. ஆனால், உட­ன­டி­யாக அதன் அடுத்த பாகத்தை எடுக்க முடி­யாது. அதற்­கான கதை­யும் நடி­கர்­கள், தொழில்­நுட்பக் குழுக்­களும் அமைந்­தால் மட்­டுமே சாத்­தி­யம்.

"மற்ற நடி­கர்­க­ளை­ப்போல் இல்­லா­மல் நடித்­த­தும் நம் வேலை முடிந்­து­விட்­டது என்று போகா­மல் தொழில்

ரீதி­யாக எனக்கு உத­வி­யாக இருந்­தார் படத்­தின் நாய­கன் ஆர்யா.

"அரண்­மனை' படம் என்­றாலே நடி­கை­க­ளுக்கு

முக்­கி­யத்­து­வம் இருக்­கும். இந்­தப் படத்­தி­லும்

ஆண்ட்­ரியா, ராஷி கண்ணா, சாக்‌ஷி அகர்­வால்

ஆகி­யோர் முக்­கிய கதா­பாத்­தி­ரங்­களில் நடித்­தி­ருக்­

கி­றார்­கள்.

'அரண்­மனை 1'ம் பாகத்தை உத­ய­நிதி வெளி­யிட்­டார்.

தற்­போது 'அரண்­மனை 3' திரைப்­ப­டத்­தை­யும் பிர­ம்மாண்­ட­மான முறை­யில் அவரே வெளி­யி­டு­கி­றார். இந்­தப் படத்தைப் பார்த்த ஒரே ஆள் உத­ய­நிதி மட்­டும்­தான். 'அரண்­மனை 1' படத்­தைப் பார்த்து கண்­டிப்­பாக வெற்றி பெறும் என்று சொன்­ன­வ­ரும் அவர்­தான். தற்­போது 'அரண்­மனை 3' படத்­தைப் பார்த்­து­விட்டு அரு­மை­யாக இருக்­கிறது என்று சொன்­ன­வ­ரும் அவர்­தான்.

"படத்­தைப் பார்க்­கின்ற சிறு­வர்­கள், பொது­மக்­கள், தாய்­மார்­கள் அனை­வ­ருமே கவ­லையை மறந்து ரசிக்க வேண்­டும் என்­ப­து­தான் என்­னு­டைய நோக்­கம்," என்றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!