பன்முக திறமைகொண்ட, தெய்வபக்தி மிகுந்த நடிகர் ஸ்ரீகாந்த் காலமானார்

முதல் படத்­தி­லேயே நாய­க­னாக அறி­மு­க­மா­ன­வர் ஸ்ரீகாந்த். இயல்­பான நடிப்­பால் சாமான்ய மக்­க­ளின் நாய­க­னாக

உயர்ந்­தார். வில்­லன், சின்­னத்­திரை நடி­கர் என பன்­முக திற­மை­யால் உச்­சம்

தொட்­டார். அவர் செவ்­வாய்க்­கி­ழமை உடல்­ந­ல­மின்­மை­யால் கால­மா­னார்.

திரைக்கு வரு­வ­தற்கு முன் சென்­னை­யில் உள்ள அமெ­ரிக்க தூதர­கத்­தில் பணி­பு­ரிந்­தார். அப்­போ­தி­ருந்தே மேடை நாட­கங்­களில் நடிப்­பதை வழக்­க­மாகக் கொண்­டி­ருந்­தார் ஸ்ரீகாந்த்.

1964ல் இயக்­கு­நர் ஸ்ரீதர் தயா­ரித்து இயக்­கிய 'வெண்­ணிற ஆடை' படத்­தில் அறி­மு­க­மா­னார். முதல் படத்­தி­லேயே கதா­நா­ய­க­னாக நடிக்­கும் வாய்ப்பு கிடைத்­தது. அவர் ஏற்று நடித்த டாக்­டர் சந்­துரு கதா­பாத்­தி­ரம் ரசி­கர்­க­ளைக் கவர்ந்­தது.

இப்­ப­டம் இவ­ருக்கு மட்­டு­மின்றி மறைந்த முதல்­வர் ஜெய­ல­லிதா, நடிகை வெண்­ணிற ஆடை நிர்­மலா, வெண்­ணிற ஆடை மூர்த்தி ஆகி­யோ­ருக்கு முதல் பட­மாக அமைந்­தது குறிப்பிடத்தக்கது.

'மேஜர் சந்­தி­ர­காந்த்' நாட­கத்­தில் ஸ்ரீகாந்த் கதா­பாத்­தி­ரத்­தில் பிர­ப­ல­மா­னார். இதை­ய­டுத்து தனது சொந்­தப் பெய­ரான வெங்­கட்­ரா­மனைப் பயன்­ப­டுத்­தா­மல் ஸ்ரீகாந்த் பெய­ரி­லேயே சினி­மா­வி­லும் நடித்­தார். 'வெண்­ணிற ஆடை' படத்­திற்குப் பிறகு இவ­ருக்கு பெரும்­பா­லும் குணச்­சித்­திர, நகைச்­சுவை வேடங்கள் கிடைத்­தன.

தன்­னால் எந்த கதா­பாத்­தி­ரத்­தி­லும் நடிக்க முடி­யும் என்று நிரூ­பித்­த­வர் ஸ்ரீகாந்த். 'எதிர் நீச்­சல்' 'பூவா தலையா', 'பாமா விஜ­யம்' 'நவ­க்கி­ர­கம், 'காசே­தான் கட­வு­ளடா' போன்ற படங்­கள் இவ­ரு­டைய நகைச்­சுவை நடிப்­பிற்குச் சான்று.

1972ல் இயக்­கு­நர் திரு­லோ­க­சந்­தர் இயக்­கத்­தில் வெளி­வந்த 'அவள்' படத்­தின் மூலம் வில்­ல­னாக அறி­மு­க­மா­னார்.

சிவா­ஜி­யோடு நடித்த 'தங்­கப்­

ப­தக்­கம்' படம் இவ­ரது திரைப் பய­ணத்­தில் ஒரு மைல்­கல். இப்­

ப­டத்­தில் இவ­ரது 'ஜெகன்' கதா­பாத்­தி­ரம் தமிழ் ரசி­கர்­க­ளால் எளி­தில் மறக்க இய­லாது.

எழுத்­தா­ளர் ஜெய­காந்­த­னின் நாவல்­க­ளான 'சில நேரங்­களில் சில மனி­தர்­கள்', 'ஒரு நடிகை நாட­கம் பார்க்­கி­றாள்', 'கருணை உள்­ளம்' போன்ற படங்­களில் நடி­கர் ஸ்ரீகாந்த முக்­கிய வேடத்­தில் நடித்­தி­ருந்­தார்.

சிவாஜி, ஜெமினி, ஜெய் சங்­கர், முத்­து­ரா­மன், சிவ­கு­மார், கமல், ரஜினி நடி­கர்­க­ளுடன் நடித்திருந்தார்.

எம்.ஜி.ஆரு­டன் மட்டும் அவர் நடிக்­க­வில்லை. இயக்­கு­நர் ஸ்ரீதர் தொடங்கி பால­சந்­தர், பீம்­சிங், திரு­லோ­க­சந்­தர், முக்தா ஸ்ரீனி­வா­சன், மாத­வன், கிருஷ்­ணன் பஞ்சு, திரு­மு­கம் உட்­பட முக்­கிய இயக்­கு­நர்­க­ளு­டன் பணி­யாற்­றி­உள்­ளார்.

200 படங்­கள் வரை நடித்­தி­ருக்­கும் ஸ்ரீகாந்த், நடி­கர் என்ற எந்த

ஆர்ப்­பாட்­ட­மும் இல்­லாத அமை­திக்கு சொந்­தக்­கா­ரர். கடை­சி­யாக 2009ல் 'குடி­ய­ரசு' படத்­தில் நடித்­தார்.

ஸ்ரீகாந்­துக்குத் தெய்வ பக்தி அதி­கம். நம்­பி­யா­ரு­டன் சேர்ந்து 40 முறைக்கு மேலாக சப­ரி­மலை ஐயப்­பன் கோயி­லுக்­குச் சென்­றி­ருக்­கி­றார்.

82 வய­தான ஸ்ரீகாந்த் வீட்டிலேயே கால­மா­னார். அவ­ரு­டைய மறை­வுக்கு அர­சி­யல் தலை­வர்­கள், திரை­யு­லக பிர­ப­லங்­கள் பல­ரும் இரங்­கல் தெரி­வித்­துள்­ள­னர்.

ரஜி­னி­காந்த் தனது டுவிட்­டர் பதி­வில், "என்­னு­டைய அருமை நண்­பர் ஸ்ரீகாந்த். அவ­ரு­டைய மறைவு எனக்கு மிக­வும் வருத்­த­ம­ளிக்­கிறது. அவ­ரு­டைய ஆத்மா சாந்­தி­ய­டை­யட்­டும்," என்று தெரி­வித்­துள்­ளார்.

கமல் தனது டுவிட்­டர் பதி­வில், "கதா­நா­ய­கன், வில்­லன், குணச்­சித்­தி­ரப்

பாத்­தி­ரங்­கள் என அனைத்து வேடங்­க­ளி­லும் திறம்­பட நடித்து நடிப்­புக் கலை­ஞ­ரா­கத் திகழ்ந்த ஸ்ரீகாந்த், தீவி­ர­மான

இலக்­கிய வாச­க­ரா­க­வும் ஜெய­காந்­த­னின் ஆப்த சிநே­கி­த­ரா­க­வும் இருந்­தார். இன்று தன் இயக்­கங்­களை நிறுத்­திக்­கொண்­டார். இதய கனத்­தோடு வழி­ய­னுப்­பி­வைப்­போம்" என்று தெரி­வித்­துள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!