ஒருமுறை ரஜினியிடம் 'நான், 'காமெடி சூப்பர் ஸ்டார்' என்று பட்டம் சூட்டிக்கொள்ளலாமா?' என்று சந்தானம் அனுமதி கேட்டார்.
அதற்கு பதில் கூறிய ரஜினி, "சூப்பர் ஸ்டார் பட்டம் என்பது ரஜினிகாந்துக்கு மட்டும்தான் என்று பட்டாவா எழுதி வைத்திருக்கிறேன். யார் வேண்டுமானாலும் சூட்டிக்கொள்ளுங்கள்..." என்று மிகவும் ஜாலியாக சொன்னார்.
இந்நிலையில், சந்தானம் நாயகனாகிவிட்டதைத் ெதாடர்ந்து, 'காமெடி சூப்பர் ஸ்டார்' பட்டத்தை யோகிபாபுவை சூட்டிக்கொள்ளுமாறு ரசிகர்கள் வற்புறுத்தி வருகின்றனர். "நானே ஏதோ ஒரு சுமாரான நகைச்சுவை நடிகன்தான். அப்படியெல்லாம் நான் பட்டம் வைத்துக்கொண்டால், யாராவது அதை ஏற்றுக்கொள் வார்களா?" என்று கேட்டு பட்டத்தை வேண்டாம் என்று மறுத்து வருகிறார் யோகிபாபு.
சந்தானத்துக்கு எச்சரிக்கை
இதற்கிடையே, பழைய பாடல்களை 'ரீ-மிக்ஸ்' செய்து இளவட்ட நடிகர்கள் நடித்து வருவதை அடுத்து, நடிகர் சந்தானத்தையும் இந்த ஆசை விடவில்லை. அதையடுத்து, கமல் நடித்த 'மைக்கேல் மதன காமராஜன்' படத்தில் இடம்பெற்ற 'வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்...' என்ற பாடலை அண்மையில் வெளியான 'டிக்கிலோனா' படத்தில் 'ரீ-மிக்ஸ்' செய்திருந்தார். கமல்ஹாசன் மிகச்சிறப்பான நடனமாடி இருந்த அந்தப் பாடலை சந்தானம் சொதப்பிவிட்டதாக கூறும் கமல் ரசிகர்கள், "எவ்வளவு தைரியம் இருந்தால் அற்புதமான ஒரு பாடலை இப்படி மோசமாக ஆடியிருப்பீர்கள். இனி அந்தப் பாட்டை எப்போது கேட்டாலும், உங்களது ஆட்டம்தான் ஞாபகத்துக்கு வரும். இனிமேல், உலக நாயகனோட பாட்டை நாஸ்தி பண்ணினால் நடப்பதே வேறு," என்று எச்சரித்துள்ளனர்.

