'லேடி சூப்பர் ஸ்டார்' என அழைக்கப்படும் நயன்தாராவின் புகைப்படத்தை 'ஃபோர்ப்ஸ்'
இதழ் அதன் இந்தியப் பதிப்பு அட்டையில் வெளியிட்டு தமிழ், தெலுங்கு, மலையாளள் திரைகளில் முன்னணியில் இருக்கும்
'சூப்பர் டூப்பர்' நடிகை' என புகழ்ந்துள்ளது.
நயன்தாரா 'சத்தியன் அந்திக்காடின் மனசினக்கரை' படத்தின் மூலம் 2003ல் மலையாளத் திரையில் முதன் முதலாக அறிமுகமானார். டயானா மரியம் குரியன் என்ற அவரது பெயரைச் சினிமாவுக்காக நயன்தாரா என்று மாற்றினார்.
மலையாளத்தில் மோகன்லாலுடன் 'விஸ்மயதம்பத்து', 'நாட்டு ராஜாவு' படங்களிலும் மம்முட்டி
யுடன் 'தஸ்கர வீரன்', 'ராப்பகல்' படங்களிலும் நடித்தார்.
2005ல் 'ஐயா' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதே ஆண்டு ரஜினி ஜோடியாக 'சந்திரமுகி'யில் நடிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.
மலையாளத்தில் நடிக்கும்வரை நயன்தாரா மற்ற நடிகை
களைப்போல சாதாரண நடிகையாகவே காணப்பட்டார்.
'ஐயா', 'சந்திரமுகி'க்குப் பிறகு அவருடன் படத்தில் நடிக்க தமிழ் நடிகர்கள் ஆர்வம் காட்டத் தொடங்கினர். தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடிக்கத் தொடங்கினார். இடையில் அவர் சில மாதங்கள் காணாமல் போனார்.
திடீரென்று 'பில்லா' படத்தில் உடல் மெலிந்து புது உற்சாகத்
துடன் மீண்டும் திரும்பி வந்தார். அன்றிலிருந்து இன்றுவரை நயன்தாராவே தமிழின் 'நம்பர் ஒன்'
நடிகையாக இருக்கிறார்.
சிம்பு, பிரபுதேவாவுடனான நயன்தாராவின் காதலும் பிரிவும்
அவரது திரை வாழ்க்கையை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை.
'நானும் ரௌடிதான்' படத்
திலிருந்து இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். நயன்தாராவின் முன்னணி நடிகை என்ற அந்தஸ்துக்கு கடந்த கால காதல் பிரச்சினைகள் எதுவும் குறுக்கே நிற்கவில்லை.
இந்நிலையில் பிரபல 'ஃபோர்ப்ஸ்' இதழின் இந்திய பதிப்பில் நயன்தாராவின் புகைப்படத்தை அட்டைப் படமாகப் போட்டு தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் முன்னணியில் இருக்கும் 'சூப்பர் டூப்பர் நடிகை' என புகழ்ந்துள்ளது. அதோடு தென்னிந்தியாவில் இன்ஸ்டகிராமில் புகழ்பெற்றவர் என்றும் குறிப்பிட்டு உள்ளது.
நயன்தாரா அந்த அட்டைப் படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரது ரசிகர்கள் பரவலாக பகிர்ந்து வருகிறார்கள். நயன்தாரா நடித்திருக்கும் 'அண்ணாத்த' தீபாவளிக்கு வெளியாகிறது.
அதையடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' வெளியாக உள்ளது. அத்துடன் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் இந்திப் படத்திலும் நடித்து வருகிறார்.
யுவராஜ் தயாளனின் புதிய படம், மலையாளத்தில் தயாராகும் 'கோல்ட்', தெலுங்கில் தயாராகும் சிரஞ்சீவியின் 'காட்ஃபாதர்'
படங்களும் நயன்தாரா கைவசம் உள்ளன.
'காத்துவாக்குல காதல்' படத்துக்கு ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. திரை
யரங்கில் வெளியாக வேண்டிய படம் இது. ஆனால், படத்தை 'ஓடிடி'யில் வெளியிடுவது என முடிவு செய்துள்ளனர். டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் இந்தப் படம்
தீபாவளிக்கு வெளியாக வாய்ப்புள்ளது என்கிறது கோலிவுட்.
கோலிவுட் திரையுலகின் 'லேடி சூப்பர் ஸ்டார்' என்று அழைக்கப்படும் நயன்தாரா, தமிழ்த் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்ற பெருமைக்கு உரியவர். நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஏற்கெனவே, முன்னணி நடிகர்
களுக்கு நிகராக இவரது படம் வசூலிலும் சாதனை படைத்து வரும் நிலையில், ஃபோர்ப்ஸ் வெளியிட்ட அட்டைப் படத்தினால் மேலும் அவருடைய புகழ் உயர்ந்துள்ளது.
அவருக்குக் கிடைத்த இந்த மரியாதைக்கு திரைப் பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

