ஃபோர்ப்ஸ்: சூப்பர் டூப்பர் நடிகை நயன்தாரா

ஃபோர்ப்ஸ்: சூப்பர் டூப்பர் நடிகை நயன்தாரா

3 mins read
3b8f94bd-4786-4c16-95f5-7168781690a4
-

'லேடி சூப்­பர் ஸ்டார்' என அழைக்­கப்­படும் நயன்­தா­ரா­வின் புகைப்படத்தை 'ஃபோர்ப்ஸ்'

இத­ழ் அதன் இந்­தியப் பதிப்­பு அட்­டை­யில் வெளி­யிட்டு தமிழ், தெலுங்கு, மலை­யா­ள­ள் தி­ரை­களில் முன்­ன­ணி­யில் இருக்­கும்

'சூப்­பர் டூப்­பர்' நடிகை' என புகழ்ந்­துள்­ளது.

நயன்­தாரா 'சத்­தி­யன் அந்­திக்­கா­டின் மன­சி­னக்­கரை' படத்­தின் மூலம் 2003ல் மலை­யா­ளத் திரை­யில் முதன் முத­லாக அறி­மு­க­மா­னார். டயானா மரி­யம் குரி­யன் என்ற அவ­ரது பெய­ரைச் சினி­மா­வுக்­காக நயன்­தாரா என்று மாற்­றி­னார்.

மலை­யா­ளத்­தில் மோகன்­லா­லு­டன் 'விஸ்­ம­ய­தம்­பத்து', 'நாட்டு ராஜாவு' படங்­க­ளி­லும் மம்­முட்­டி­

யு­டன் 'தஸ்­கர வீரன்', 'ராப்­ப­கல்' படங்­க­ளி­லும் நடித்­தார்.

2005ல் 'ஐயா' படத்­தின் மூலம் தமி­ழில் அறி­மு­க­மா­னார். அதே ஆண்டு ரஜினி ஜோடி­யாக 'சந்­தி­ர­முகி'யில் நடிக்­கும் வாய்ப்பு அவ­ருக்­குக் கிடைத்­தது.

மலை­யா­ளத்­தில் நடிக்­கும்­வரை நயன்­தாரா மற்ற நடி­கை­

க­ளைப்போல சாதா­ரண நடி­கை­யா­கவே காணப்­பட்­டார்.

'ஐயா', 'சந்­தி­ர­முகி'க்குப் பிறகு அவ­ரு­டன் படத்­தில் நடிக்க தமிழ் நடி­கர்­கள் ஆர்­வம் காட்­டத் தொடங்­கி­னர். தெலுங்­கி­லும் முன்­னணி நடி­கர்­க­ளு­டன் நடிக்­கத் தொடங்­கி­னார். இடை­யில் அவர் சில மாதங்­கள் காணா­மல் போனார்.

திடீ­ரென்று 'பில்லா' படத்­தில் உடல் மெலிந்து புது உற்­சா­கத்­

து­டன் மீண்­டும் திரும்பி வந்­தார். அன்­றி­லி­ருந்து இன்­று­வரை நயன்­தா­ராவே தமி­ழின் 'நம்­பர் ஒன்'

நடி­கை­யாக இருக்­கி­றார்.

சிம்பு, பிர­பு­தே­வா­வு­ட­னான நயன்­தா­ரா­வின் காத­லும் பிரி­வும்

அவ­ரது திரை வாழ்க்­கையை எந்த விதத்­தி­லும் பாதிக்­க­வில்லை.

'நானும் ரௌடி­தான்' படத்­

தி­லி­ருந்து இயக்­கு­நர் விக்­னேஷ் சிவனை காத­லித்து வரு­கி­றார். நயன்­தா­ரா­வின் முன்­னணி நடிகை என்ற அந்­தஸ்­துக்கு கடந்த கால காதல் பிரச்­சி­னை­கள் எது­வும் குறுக்­கே நிற்­க­வில்லை.

இந்­நி­லை­யில் பிர­பல 'ஃபோர்ப்ஸ்' இத­ழின் இந்­திய பதிப்­பில் நயன்­தா­ரா­வின் புகைப்­ப­டத்தை அட்­டைப் பட­மா­கப் போட்டு தமிழ், தெலுங்கு, மலை­யா­ளத்­தில் முன்­ன­ணி­யில் இருக்­கும் 'சூப்­பர் டூப்­பர் நடிகை' என புகழ்ந்­துள்­ளது. அதோடு தென்­னிந்­தி­யா­வில் இன்ஸ்­ட­கி­ரா­மில் புகழ்­பெற்­ற­வர் என்­றும் குறிப்­பிட்­டு உள்­ளது.

நயன்­தாரா அந்த அட்­டைப் படத்­தை தனது டுவிட்­டர் பக்­கத்­தில் பகிர்ந்­துள்­ளார். அவ­ரது ரசி­கர்­கள் பர­வ­லாக பகிர்ந்து வரு­கி­றார்­கள். நயன்­தாரா நடித்­தி­ருக்­கும் 'அண்­ணாத்த' தீபா­வ­ளிக்கு வெளி­யா­கிறது.

அதை­ய­டுத்து விக்­னேஷ் சிவன் இயக்­கத்­தில் 'காத்து வாக்­குல ரெண்டு காதல்' வெளி­யாக உள்­ளது. அத்­து­டன் அட்லி இயக்­கத்­தில் ஷாருக்­கான் நடிக்­கும் இந்­திப் படத்­தி­லும் நடித்து வரு­கி­றார்.

யுவ­ராஜ் தயா­ள­னின் புதிய படம், மலை­யா­ளத்­தில் தயா­ரா­கும் 'கோல்ட்', தெலுங்­கில் தயா­ரா­கும் சிரஞ்­சீ­வி­யின் 'காட்­ஃபா­தர்'

படங்­களும் நயன்­தாரா கைவ­சம் உள்­ளன.

'காத்­து­வாக்­குல காதல்' படத்­துக்கு ரசி­கர்­க­ளி­டையே அதிக எதிர்­பார்ப்பு நில­வு­கிறது. திரை­

ய­ரங்­கில் வெளி­யாக வேண்­டிய படம் இது. ஆனால், படத்தை 'ஓடிடி'யில் வெளி­யி­டு­வது என முடிவு செய்­துள்­ள­னர். டிஸ்னி+ ஹாட்ஸ்­டா­ரில் இந்­தப் படம்

தீபா­வ­ளிக்கு வெளி­யாக வாய்ப்­புள்­ளது என்­கிறது கோலி­வுட்.

கோலி­வுட் திரை­யு­ல­கின் 'லேடி சூப்­பர் ஸ்டார்' என்று அழைக்­கப்­படும் நயன்­தாரா, தமிழ்த் திரை­யு­ல­கில் அதிக சம்­ப­ளம் வாங்­கும் நடிகை என்ற பெரு­மைக்கு உரி­ய­வர். நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஏற்­கெ­னவே, முன்­னணி நடி­கர்

களுக்கு நிக­ராக இவ­ரது படம் வசூ­லி­லும் சாதனை படைத்து வரும் நிலை­யில், ஃபோர்­ப்ஸ் வெளி­யிட்ட அட்­டைப் படத்­தி­னால் மேலும் அவ­ரு­டைய புகழ் உயர்ந்­துள்­ளது.

அவ­ருக்­குக் கிடைத்த இந்த மரி­யா­தைக்கு திரைப்­ பி­ர­ப­லங்­களும் ரசி­கர்­களும் வாழ்த்துத் தெரி­வித்து வரு­கின்­ற­னர்.