ராஷ்மிகா: வங்காளப் பெண்ணாக நடிக்க ஆசை

ராஷ்மிகா: வங்காளப் பெண்ணாக நடிக்க ஆசை

1 mins read
3999db56-e4bb-4a73-9739-03a02a9c34a9
-

'கீதா கோவிந்தம்' என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. அந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். தற்பொழுது இந்தியில் 'மிஷன் மஞ்சு', 'குட்பை' என இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் ராஷ்மிகாவை வங்காளப் பாணி உடையுடன் இருப்பது போன்று ஓவியம் வரைந்து வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

அதைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்த ராஷ்மிகா மந்தனா, தான் வெகு நாட்களாகவே வங்காளப் பெண் கதாபாத்திரத்தில் நடிக்க விரும்பியதாகவும் அதற்கு அச்சாரம் போடுவதுபோல அந்த கலைஞர் தன்னை இவ்வாறு வரைந்து இருப்பதாகவும் மகிழ்ச்சியுடன் தன்னுடைய டுவிட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்து வரும் ராஷ்மிகா மந்தனா அண்மையில் கோவாவில் புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார். அந்த வீட்டின் நீச்சல் குளத்தின் அருகே புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ள புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இவர் தமிழில் நடிகர் கார்த்திக்குடன் ஜோடியாக 'சுல்தான்' என்ற படத்தில் நடித்திருந்தார்.