செல்வராகவன் இயக்கும் 'நானே வருவேன்' படத்தில் தனுஷுக்கு ஜோடியாக இந்துஜா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செல்வராக வன்-தனுஷ் கூட்டணியில் உருவான 'துள்ளுவதோ இளமை', 'காதல் கொண்டேன்', 'புதுப்பேட்டை', 'மயக்கம் என்ன' ஆகிய படங்கள் பிரபலமாயின. 'யாரடி நீ மோகினி' திரைப்படம் கூட தெலுங்கில் செல்வராக வன் இயக்கிய படத்தின் தமிழ் தழுவல்தான். எனவே அதனை யும் சேர்த்தால் இருவர் கூட்டணியில் ஐந்து படங்கள் வெளியாகியுள்ளன. 'நானே வருவேன்' ஆறாவது கூட்டணி படம்.
தனுஷ் ஜோடி இந்துஜா
1 mins read

