நடிகர் சூர்யாவின் 39வது படம் 'ஜெய் பீம்'. இந்தப் படத்தின் முன்னோட்டக் காட்சி ஆயுத பூஜையன்று வெளியாகி பலராலும் பார்க்கப்பட்டு, பகிரப்பட்டு
வருகிறது.
'ஜெய் பீம்' படத்தை 'கூட்டத்தில் ஒருவன்' பட இயக்குநர் டி.ஜே.ஞானவேல் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் சூர்யா ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். பிரகாஷ் ராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க, இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்க, சூர்யாவின் '2டி என்டர்டெயின்மென்ட்' நிறுவனம் தயாரித்துள்ளது.
'ஜெய் பீம்' படத்தில் இருளர், பழங்குடியினருக்காகப் போராடும் வழக்கறிஞர் வேடத்தில் சூர்யா நடித்துள்ளார்.
உண்மைச் சம்பவத்தை அடிப்
படையாகக்கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் கெளரவ வேடமாக இல்லாமல் படம் முழுவதும் வருவதுபோல் உருவாக்கப் பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில் தீபாவளியை ஒட்டி வருகின்ற நவம்பர் 2ஆம் தேதி 'அமேசான் ப்ரைம் ஓடிடி' தளத்தில் நேரடியாக வெளியாக
உள்ளது.
முன்னோட்டக் காட்சியில் "இந்த சாதியில் திருட்டு வழக்கில் கைது செய்யப்படுவது
சகஜம் சார் என்று ஒருவர் சொல்ல, அதற்கு பதிலளிக்கும் சூர்யா, திருடன்கள் இல்லாத சாதி இருக்கா நடராஜ்? உங்கள் சாதி என் சாதி என எல்லா சாதியிலும் பெரிய பெரிய திருடர்கள் இருக்கிறார்கள்," என்று பேசும் வசனம் ரசிகர்களிடையே கவனம் பெற்று, இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
இந்த முன்னோட்டக் காட்சியை தன்னுடைய டுவிட்டர்
பக்கத்தில் வெளியிட்டு, "உண்மையை உரக்கச் சொன்னால் மட்டுமே உண்மையான மாற்றம் நிகழும். மகிழ்விப்பதைக் காட்டிலும், உணர்வுபூர்வமாய் உண்மையின் பக்கம் நின்ற மனநிறைவைத் தரும் 'ஜெய் பீம்!" என்று
பதிவிட்டுள்ளார்.
மேலும் ஐபிஎல் இறுதிப் போட்டியின்போது 'ஜெய் பீம்' படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் சூர்யா கலந்துகொண்டார். அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பற்றி சில சுவாரஸ்யமான தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
அதில், ரசிகர்களுடைய அன்பை எப்படி திருப்பி கொடுப்பது என்று நான் தவித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், தோனி எப்போதுமே அதைத் தவற விட்டதில்லை. அழுதுகொண்டிருந்த சிறுமியை ஆட்டத்தில் வெற்றி பெற்றதும் மட்டையில் கையெழுத்திட்டு அந்த சிறுமிக்கு தோனி கொடுத்து உடனே அந்த சிறுமியை சிரிக்க வைத்திருக்கிறார். அந்த சிறுமியின் வாழ்க்கையில் அந்த தருணத்தை என்றும் மறக்க முடியாத வகையில் தோனி மாற்றியுள்ளார்.
"அதுபோல் என் மனைவி ஜோதிகா ஒருமுறை குழந்தை
களுடன் தோனியைப் பார்க்க வேண்டும் என்று கேட்டபோது அவரும் எங்களுக்கான நேரத்தை ஒதுக்கினார்.
"24' படத்தில் அவருடன் ஃசெல்பி எடுக்க கேட்டேன். தோனி அனுமதி கொடுத்தார். தோனியிடமிருந்து எனக்கு நிறைய அன்பு கிடைத்திருக்கிறது," என்று சூர்யா கூறினார்.அந்தக் காணொளி தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

