இணையத் தொடர் பக்கம் தாவிய திரிஷா

இணையத் தொடர் பக்கம் தாவிய திரிஷா

1 mins read
5fd8d96b-2431-4787-b2a4-7eb58e4c2f69
-
Google News Preferred Icon

நடிகை திரிஷா கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து வருகிறார். 'அரண்மனை 2' படத்தில் பேயாக இவர் நடித்திருந்தார். அந்தப் படம் இவருக்கு சிறப்பான பெயரை பெற்றுத் தந்தது. ஆயினும் இவரது நடிப்பில் படங்கள் குறைந்துள்ளன. இந்நிலையில் ஹன்சிகா, தமன்னாவைப் பின்பற்றி இவரும் இணையத் தொடரில் நடித்து வருகிறார்.

'ஓடிடி'யில் வெளியாகவுள்ள இந்தத் தொடரை 'சோனி லைவ்' முதல்முறையாக தெலுங்கில் தயாரிக்கிறது.

"8 பாகங்களாக உருவாக்கப்பட உள்ள இந்த இணையத் தொடரில் நடிப்பது தனக்கு முதல் அனுபவம்," என்று கூறினார் திரிஷா.

சக்தி காந்த் கார்த்திக் என்பவர் தொடருக்கு இசையமைக்கவுள்ள நிலையில் தற்போது இந்த தொடர் பூஜையுடன் துவக்கப்பட்டுள்ளது. மேலும் பூஜையின் புகைப்படங்களையும் படக்குழுவினர் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். தொடரில் திரிஷாவின் படமும் பகிரப்பட்டுள்ளது.

இந்தத் தொடரில் சாய் குமார், அமானி உள்ளிட்டவர்களும் நடிக்கின்றனர். அவினாஷ் கொல்லா என்பவர் இந்த தொடரின் மூலம் தயாரிப்பாளராகியுள்ளார்.

படங்களில் நாயகியாகவும் தனிப்பட்ட கதாபாத்திரங்களிலும் நடித்துள்ள திரிஷா தனது அடுத்தக் கட்டத்தை இணையத் தொடர் மூலம் தொடர இருக்கிறார். இணையத் தொடர்களில் நடிக்க அதிக சம்பளம் கொடுக்கப்படுகிறது.

மேலும் தணிக்கை பிரச்சினை இல்லாத காரணத்தால் இதுபோன்ற இணையத் தொடர்களில் நடிப்பதற்கு பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் திரிஷாவின் இந்த தொடர் சிறப்பான வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கலாம்.