திரைத் துளிகள்

திரைத் துளிகள்

1 mins read
421dfdda-9868-4d83-9933-ed16358f00cd
-

'மெட்டி ஒலி' புகழ் உமா காலமானார்

'சன்' தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற தொடர் 'மெட்டி ஒலி'. இந்தத் தொடரில் சிதம்பரத்தின் 4வது மகளாக நடித்தவர்தான் உமா மகேஸ்வரி. திருமுருகனுக்கு ஜோடியாக 'விஜி' என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். உமாவின் நடிப்பும் இத்தொடரில் அதிகம் பேசப்பட்டது. அதன்பின்னர், 'வெற்றிக் கொடி கட்டு', 'உன்னை நினைத்து', 'அல்லி அர்ஜுனா' உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார். இவரது கணவர் ஒரு கால்நடை மருத்துவர். இவர்களுக்கு குழந்தை இல்லை. அண்மையில் மஞ்சள் காமாலை காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர், திடீரென்று நேற்று காலமானார். உமா மகேஸ்வரியின் மறைவு சின்னத்திரை நடிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

'தீபாவளி சரவெடிதான்'

சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம் 'அண்ணாத்த' தீபாவளிக்கு வெளிவர இருக்கிறது. இந்தப் படத்திற்கு 'யுஏ' சான்றிதழை தணிக்கைக் குழு வழங்கி இருப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு 'இந்த தீபாவளி சரவெடிதான்' என்றும் பதிவிட்டுள்ளது படக்குழு. இந்நிலையில் இந்தப் படத்தின் தெலுங்குப் பதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.14 கோடிக்கு மட்டுமே விற்பனையாகி இருப்பதாக செய்தி வெளிவந்துள்ளது. இதனால் ரஜினியின் ரசிகர்கள் கவலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.