'விடுதலை'யில் போலிசாக சூரி

'விடுதலை'யில் போலிசாக சூரி

1 mins read

சூரி நாய­க­னாக நடிக்­கும்

'விடு­தலை' திரைப்­ப­டத்தை ஐந்து மொழி­களில் வெளி­யிட படக்­குழு திட்­ட­மிட்­டுள்­ளது.

தமிழ்த் திரை­யின் முன்­னணி நகைச்­சுவை நடி­க­ராக வலம்

வரு­ப­வர் சூரி. இவர்

தற்­பொழுது வெற்­றி­

மா­றன் இயக்­கத்­தில் உரு­வாகி வரும் 'விடு­தலை' என்ற திரைப்­

ப­டத்­தின் மூலம் கதா­நா­ய­க­னாக அறி­மு­க­மாக உள்­ளார்.

படத்­திற்கு இளை­ய­ராஜா இசை­ய­மைக்­கி­றார். வேல்­ராஜ் ஒளிப்­ப­திவு செய்­யும் இந்­தப் படத்தை தயா­ரிப்­பா­ளர் எல்­ரெட் குமார் தயா­ரித்து வரு­கி­றார்

சூரி போலிஸ் அதி­கா­ரி­யாக நடிக்­கும் இப்­ப­டத்­தில் தமிழ் சினி­மா­வின் முன்­னணி நடி­கர் விஜய் சேது­பதி கைதி கதா­பாத்­தி­ரத்­தில் நடிக்­கி­றார். ஆகை­யால் இந்த படத்­திற்­கான எதிர்­பார்ப்பு நாளுக்கு நாள் அதி­க­ரித்­துக்­கொண்டே இருக்­கிறது.

இந்­நி­லை­யில் இந்தத் திரைப்­

ப­டத்தை தெலுங்கு, மலை­யா­ளம், இந்தி, கன்­ன­டம் ஆகிய மொழி­க­ளி­லும் வெளி­யிட படக்­குழு திட்­ட­மிட்டு உள்­ள­தாக தெரி­ய­வந்­துள்­ளது.

இது­கு­றித்த அதி­கா­ர­பூர்வ அறி­விப்பு கூடிய விரை­வில் வெளி­யா­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.