இயக்குநர்: ‘மாநாடு’ நட்டமடையக்கூடாது

நடி­கர் சிம்பு நடித்­தி­ருக்­கும் 'மாநாடு' திரைப்­ப­டம் தீபா­வ­ளிக்கு வெளி­யா­காது என தயா­ரிப்­பா­ளர் சுரேஷ் காமாட்சி அறி­வித்­துள்­ளார். அத­னால் சிம்பு ரசி­கர்­கள் கவ­லை­யில் ஆழ்ந்­துள்­ள­னர்.

சுரேஷ் காமாட்சி தயா­ரிப்­பில் சிம்பு நடிப்­பில் உரு­வா­கி­யுள்ள படம் 'மாநாடு'. வெங்­கட் பிரபு இயக்­கி­யுள்ள இந்­தப் படம்

முத­லில் தீபா­வ­ளிக்கு வெளியாகும் என்று அறி­விக்­கப்­பட்­டது. அதே நாளில் நடிகர் ரஜி­னி­காந்தின்

'அண்­ணாத்த' பட­மும் வெளி­யா­க­உள்­ள­தால் ரஜி­னி­காந்­து­டன் சிம்பு மோது­வ­தாக செய்­தி­கள் வெளி­யா­யின.

இந்த நிலை­யில் தயா­ரிப்­பா­ளர் சுரேஷ் காமாட்சி அறி­விப்பு ஒன்றை வெளி­யிட்­டுள்­ளார். அதில், "மாநாடு' திரைப்­ப­டத்தை முழு வீச்­சில் தயார் செய்து

தீபா­வ­ளிக்கு வெளி­யிட ஏற்­பாடு செய்­தோம். மற்ற நடி­கர்­க­ளு­டன் போட்டி என்று நினைக்­கா­மல் ஒரு விழா நாளில் வெளி­யிட

வேண்­டும் என்ற எண்­ணத்­து­டன் மட்டுமே தீபா­வ­ளிக்கு வெளி­

யி­டக் காத்­தி­ருந்­தோம்.

'மாநாடு' படத்­தின் மீது மிகப்­பெ­ரிய நம்­பிக்கை இருக்­கிறது. ஆனால் என்னை நம்பி வியா­பார ஒப்­பந்­தம் செய்­து­கொண்­ட­வர்­கள் பாதிக்­கக்­கூ­டாது.

"அது­போல் திரை­ய­ரங்க உரி­மை­யா­ளர்­கள் என் பட வெளி­யீட்­டில் லாபம் அடை­ய­வேண்­டுமே தவிர நட்­ட­ம­டை­யக்­கூ­டாது.

"ஒரு சில கார­ணங்­க­ளுக்­காக ஏன் என் பட­மும் அதன் வெற்­றி­யும் பலி­யா­க­வேண்­டும்?

"அத­னால் மாநாடு தீபா­வ­ளி அன்று வெளியா காமல் நவம்­பர் 25ஆம் தேதி வெளி­யா­கும். 'மாநாடு' தீபா­வளி வெளி­யீட்­டி­லி­ருந்து வெளி­

யே­று­கிறது. வெளி­யா­கும் படங்­கள் வெற்றி பெற வாழ்த்­து­கள்," என்று தெரி­வித்­துள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!