'தர்மதுரை 2 நான் இயக்கவில்லை'

'தர்மதுரை 2 நான் இயக்கவில்லை'

1 mins read

'தர்­ம­துரை' படம் 2016ஆம் ஆண்டு வெளி­யாகி நல்ல வர­வேற்­பைப் பெற்­றது. அந்­தப் படத்­தில் விஜய் சேது­பதி, தமன்னா, ஐஸ்­வர்யா ராஜேஷ் ஆகி­யோர் நடித்­தி­ருந்­த­னர். ஆர்.கே.சுரேஷ் தயா­ரித்­தி­ருந்­தார். அவர் அண்­மை­யில், "தர்­ம­துரை 2' படத்­தைத் தயா­ரிக்க இருக்­கி­றேன். முதல் பாகத்தை இயக்­கிய சீனு ராம­சா­மி­தான் இந்­தப் படத்­தை­யும் இயக்­கு­வார்," என்று வெளி­யிட்டு இருந்­தார்.

அதற்கு இயக்­கு­நர் சீனு ராம­சாமி, "தர்­ம­துரை பாகம் இரண்டு எடுக்­கப்போவ­தாக செய்­தி­ வெளி­யா­கி­யுள்­ளது. வாழ்த்­து­கள். ஆனால், அதை நான் இயக்­கு

­வ­தாக வரும் செய்­தி­யில் உண்­மை­யில்லை," என்று வலைத்­

த­ளத்­தில் மறுப்பு தெரி­வித்து இருக்­கி­றார்.