திரைத் துளிகள்

பூஜா: உள்ளுணர்வை நம்புங்கள்

எல்லாரும் உள்ளுணர்வை நம்பிச் செயல்பட வேண்டும் என்றும் அதுதான் எப்போதும் வெற்றியைத் தரும் என்றும் சொல்கிறார் பூஜா ஹெக்டே.

விஜய்யுடன் 'பீஸ்ட்' படத்தில் நடித்து வரும் அவர், திரைப்படங்களைத் தேர்வு செய்வதிலும் தமது உள்ளுணர்வு சொல்கிறபடி தான் செயல்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

"அண்மையில் நான் நடித்த 'மோஸ்ட் எலிஜிபில் பேச்சுலர்' திரைப்படம் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

"என் உள்ளுணர்வை நம்பி இந்தப் படத்தை தேர்வு செய்தேன். அந்த நம்பிக்கை வீண்போகவில்லை," என்கிறார் பூஜா ஹெக்டே.

பாலா இயக்கத்தில் ஐஸ்வர்யா

'நாச்சியார்' படத்தை அடுத்து பாலா இயக்கும் புதிய படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்க உள்ளார்.

முன்னதாக பாலா சொன்ன கதை பிடித்துப் போனதால் அதை தாமே தயாரிப்பதாக நடிகர் சூர்யா கூறியதாகவும் அவர்தான் அப்படத்தின் நாயகன் என்றும் கூறப்பட்டது.

எனினும் அத்தகவல் உறுதி செய்யப்படவில்லை.

இந்நிலையில் இப்படத்தின் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தமாகி உள்ளார். ஜனவரி மாதம் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் சூர்யா கௌரவ வேடத்தில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.

'பிக்பாஸ்' வீட்டில் பிரியா பவானி

நடிகை பிரியா பவானி சங்கர் 'பிக்பாஸ்' வீட்டுக்குள் செல்ல இருப்ப தாக தகவல் வெளியாகி உள்ளது.

அவர் நடித்துள்ள 'ஓ மணப்பெண்ணே' திரைப்படம் அக்டோபர் 22ஆம் தேதி வெளியாகிறது.

இப்படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் அவர் 'பிக்பாஸ்' வீட்டுக்குள் செல்கிறாராம். மேலும், போட்டியாளர்களுடன் சில விளையாட்டுகளிலும் பங்கேற்பார் எனத் தகவல்.

அவருடன் நடிகர் ஹரிஷ் கல்யாணும் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. ஹரிஷ் ஏற்கெனவே இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றவர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!