தனது உடல்நலம் குறித்து வெளிவரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என நடிகர் ராமராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கை ஒன்றில், தாம் நலமாக இருப்பதாகவும் விரைவில் இரண்டு திரைப்படங்களில் நடிக்க இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அப்படங்களின் பூசை விரை வில் நடைபெற உள்ளதாக அவரது தரப்பில் கூறப்படுகிறது.

