'பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாய்'

'பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாய்'

1 mins read
4093a15a-5c1c-4299-8ea5-87b1e3e51399
-
Google News Preferred Icon

அண்மைக்காலமாக பழைய பாடல்களை எல்லாம் மீண்டும் தங்கள் படங்களில் வெளியிட நடிகர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். பல வெற்றிப் படங்களைத் தயாரித்த '5 ஸ்டார் கிரியேஷன்ஸ்' S.கதிரேசன் தயாரித்து இயக்கும் திரைப்படம் 'ருத்ரன்'. இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர் இணைந்து நடித்து வருகின்றனர்.

படத்தின் அறிவிப்பு வெளியான நாள் முதலே பலரின் கவனத்தை ஈர்த்த இப்படத்தின் எதிர்பார்ப்பை மேலும் கூட்டும் வகையில் 'வீரத்திருமகன்' படத்தில் இடம்பெற்ற பிரபல பாடலான 'பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாய்' பாடலை மறுபதிப்பு செய்து படத்தில் சேர்க்க உள்ளனர்.

இந்தப் பாடலுக்காக ஒரு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட செட்டில் படப்பிடிப்பு எடுக்கப்பட்டுள்ளது. இப்பாடலுக்கு நடன இயக்குநராக ஸ்ரீதர் பணியாற்றியுள்ளார். மேலும் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நாசர், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளதோடு G.V.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.