லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் 'விக்ரம்'. கமல் தயாரித்து நடிக்கும் இந்தப் படத்தில் பிரபல 'யூடியூப்' சமையல் கலைஞர்கள் நடிக்கின்றனர்.
கிராமத்து மணம் வீச அருமையாக சமையல் செய்து அதைக் காணொளி எடுத்து வெளியிட்டு பிரபலமானவர்கள் 'வில்லேஜ் ஃபுட் பேக்டரி' சமையல்காரர்கள். அவர்கள்தான் 'விக்ரம்' படத்தில் நடிக்கிறார்களாம்.
அவர்கள் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள் என்றதும் இந்தப் படத்தில் கட்டாயம் பிரியாணி செய்யும் காட்சி இருக்குமே என்று அவர்களது ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர். இந்தக் குழுவினர் பிரியாணி செய்வதில் கைதேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

