‘அண்ணாத்த’ படத்தினால் சம்பளத்தை உயர்த்திய கீர்த்தி

கீர்த்தி சுரேஷ் ரஜி­னி­காந்­து­க்கு தங்கையாக ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து முடித்தவுடன் தன்னுடைய சம்பளத்தை திடீரென்று உயர்த்தி இருக்கிறார். அத­னால் தயா­ரிப்­பா­ளர்­கள் அதிர்ச்­சி­யில் இருக்­கின்­ற­னர்.

ரஜி­னி­காந்­து­டன் நடித்­தால்­போ­தும்

தங்­க­ளின் வாழ்க்­கைப் பாதை வேறு ஒரு நிலைக்கு உயர்ந்­து­வி­டும் என்ற நம்­பிக்­கை­யில் பல நடி­கை­கள் அவருடன் நடிக்க வாய்ப்­புக் கிடைக்­குமா என்று காத்­தி­ருக்­கி­றார்­கள்.

அந்த வகை­யில் கீர்த்தி சுரே­ஷும்

ரஜி­னிக்கு ஜோடி­யாக ‘அண்­ணாத்த’ படத்­தில் நடிக்க வாய்ப்பு கிடைக்­கும் என்று ஆவ­லு­டன் காத்­தி­ருந்­தார். ஆனால் அவ­ருக்கு கிடைத்­ததோ தங்கை வேடம்.

மனதைத் தேற்­றிக்­கொண்டு வந்த வாய்ப்பை

இழக்­கா­மல் ‘அண்­ணாத்த’ படத்­தில் ரஜி­னி­காந்­திற்கு தங்­கை­யாக நடித்து முடித்­தி­ருக்­கி­றார். படத்தில் அவருக்கு முக்கிய வேடமாம். இந்தப் படத்திற்கு பிறகு தனக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்ற எண்ணத்தில் சம்பளத்தை உயர்த்தி இருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

‘நடி­கை­யர் தில­கம்’ படத்­திற்­காக தேசிய விருது வென்ற நடிகை கீர்த்தி சுரேஷ் கோலி­வுட், டோலி­வுட்டை ஒரு கலக்கு கலக்­கப் போகி­றார் என்று காத்திருந்த நேரத்தில், இந்திப் பட­மான ‘மைதான்’ படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

அதற்காக உடல் எடையைக் குறைத்து பார்க்­கவே பரி­தா­ப­மாக எலும்பாக மாறினார் கீர்த்தி

சுரே­ஷ். ஆனால் அந்த படத்­தில் நடிக்­கும் வாய்ப்­பு பறிபோனது. அதனால், அவர் மனம் உடைந்து போனார்.

தமி­ழில் அவர் நடித்து வெளி­யான ‘பெண்­கு­யின்’ படம் படு தோல்­வியை சந்­தித்­தது. தெலுங்கு, தமி­ழில் வெளி­யான ‘மிஸ் இந்­தியா’ பட­மும் எதிர்­பார்த்த வெற்­றி­யைப் பெற­வில்லை.

பெரிய படத்­தில் மீண்­டும் நடித்து பழைய இடத்தைப் பிடிக்க வேண்­டும் என்ற முடிவுக்கு வந்த கீர்த்தி சுரேஷ், சூப்­பர் ஸ்டார் ரஜி­னி­காந்­தின் ‘அண்­ணாத்த’ படத்­தில் தங்கை வேடம் என்­றா­லும் பர­வா­யில்லை என்று ஒப்­புக்கொண்டு நடித்­தார்.

தமிழ் சூப்பர் ஸ்டார் படத்தில் நடித்த யோகம் தெலுங்கு சூப்­பர் ஸ்டா­ரான மகேஷ் பாபு­வின்

‘சர்­காரு வாரி பாட்டா’ படத்­தில் அவ­ருக்கு ஜோடி­யாக நடிக்கும் வாய்ப்பு கீர்த்தியைத் தேடி வந்தது. இந்தப் படம் அடுத்த ஆண்டு பொங்­க­லுக்கு திரை­

அரங்­கு­களில் வெளி­யா­கிறது.

மகேஷ் பாபு படத்­தைத் தொடர்ந்து தெலுங்­கில் நானி நடிக்­கும் ‘தசரா’ படத்­தில் அவ­ருக்கு ஜோடி­யாக நடிக்க ஒப்­பந்­தம் ஆகி உள்­ளார். இந்த படத்­தில் நடிக்கத்தான் கீர்த்தி சுரேஷ் அதிக சம்­ப­ளத்தை கேட்­டுள்­ள­தாக தக­வல்­கள் தற்­போது வெளி­யாகி உள்­ளன.

இது­வரை 2 கோடி ரூபாய் சம்­ப­ள­மாக பெற்று வந்த கீர்த்தி சுரேஷ் ‘தசரா’ படத்­தில் நடிக்க 3 கோடி ரூபாய் சம்­ப­ளம் கேட்­டுள்­ள­தா­க­வும் அதற்கு தயா­ரிப்பு தரப்பு சம்­ம­தம் தெரி­வித்­துள்­ள­தா­க­வும் கூறப்படுகிறது.

இந்தப் படத்தை அறி­முக இயக்­கு­நர் ஸ்ரீகாந்த் ஒடெல்லா இயக்­கு­கி­றார். சந்­தோஷ் நாரா­ய­ணன் இசை­ய­மைக்­கி­றார்.

தமி­ழில் கலக்­கிக் கொண்­டி­ருக்கும் தள­பதி விஜய் ‘பீஸ்ட்’ படத்திற்குப் பிறகு தெலுங்கு இயக்­கு­நர் வம்சியுடன் இணைந்து ‘தளபதி 66’ படத்தில் நடிக்க இருக்கிறார். அதற்கு முக்கிய காரணம் கீர்த்தி சுரேஷ்தான் என்ற பேச்சு அடிபடுகிறது.

கீர்த்தி சுரேஷ் செய்த சிபா­ரிசு கார­ண­மா­கத்­தான் தெலுங்கு இயக்­கு­ந­ரின் படத்தில் நடிக்க விஜய் ஒத்துக்கொண்டார் என்று கூறப்­ப­டு­கிறது. ‘தள­பதி 66’ படத்­தில் கீர்த்தி சுரேஷ் நடிக்­க­வும் அதிக

வாய்ப்­பு­கள் இருப்­ப­தா­க­வும் கூறப்படுகிறது.

என்­ன­தான் தேசிய விருது வென்ற நடி­கை­யாக இருந்­தா­லும் நாயகர்­க­ளுக்கு நிக­ரான சம்­ப­ளத்­தில் பத்தில் ஒரு பங்­கைக்­கூட இவர் பெற மாட்­டார்­ என்றே தெரி­கிறது.

நாய­கர்­க­ளின் சம்­ப­ளம் ரூ.100 கோடியைத் தாண்டிச் செல்­லும் நிலை­யில், நாய­கி­க­ளின் சம்­ப­ளம் 2 முதல் 5 கோடியிலேயே இருக்கிறது. நயன்தாரா மட்டுமே ரூ.10 கோடி வாங்குவதாகக் கூறுகிறது கோலிவுட்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!