விஷ்ணுக்கு வாழ்த்து தெரிவித்த ஆர்யா

'கடம்பன்' படத்தைத் தொடர்ந்து விஷ்ணு விஷால் நாயகனாக நடித்திருக்கும் படம் 'மோகன் தாஸ்'. இந்தப் படத்தின் இரண்டாம் சுவரொட்டி வெளியாகி ரசிகர்களை பெரிதும் மகிழ்வித்திருக்கிறது.

இந்தப் படத்தில் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். இந்திரஜித் சுகுமாறன், ஷாரீக் ஹாஸன், லல்லு, பிரகாஷ் ராகவன், பூர்ணிமா பாக்கியராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், ஆண்டு இறுதியில் 'மோகன் தாஸ்' படத்தை வெளியிடுவதற்கான இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாம் சுவரொட்டியை வெளியிட்டிருக்கின்றனர். அதில் விஷ்ணு விஷால் பீதியை ஏற்படுத்தும் வகையில் சிரித்துக்கொண்டு நிற்கிறார். அவர் கையில் ரத்தம் சொட்டச் சொட்ட சுத்தியல் ஒன்று இருக்கிறது.

அந்த சுத்தியலில் 4 குரங்கு பொம்மைகள் தொங்கிக் கொண்டு இருக்கின்றன. 4வது குரங்கு பொம்மை தலையில் ரத்தம் வழிய கீழே கிடக்கிறது. வித்தியாசமாக வெளியாகி உள்ள இந்த சுவரொட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சுவரொட்டியைப் பார்த்த நடிகர் ஆர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் 'டார்லிங்குக்கும் படக்குழுவினருக்கும் வாழ்த்து களைத் தெரிவித்து கொள்கிறேன், என்று பதிவிட்டிருந்தார்.

கோலிவுட்டில் ஆர்யா, விஷால், விஷ்ணு விஷால் மூவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர். ஆர்யா எப்பொழுதும் விஷ்ணு விஷாலை டார்லிங் என்றுதான் அழைப்பார்.

திரையைத் தாண்டி தங்களது சொந்த வாழ்க்கையிலும் மூவரும் இணைந்து ஒன்றாக செயல்படுவதைப் பார்த்து பலரும் இவர்களது நட்பைப் பாராட்டி வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!