'எதற்கும் துணிந்தவன்' சூர்யா

'எதற்கும் துணிந்தவன்' சூர்யா

1 mins read
108305bf-f080-4942-8c81-fd2a41455cac
-
Google News Preferred Icon

பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துவரும் படம் 'எதற்கும் துணிந்தவன்'. இந்தப் படத்தின் 80 விழுக்காடு படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

நடிகர் சூர்யா நடித்து, தயாரிக்கும் 'ஜெய் பீம்' படம் நவம்பர் 2ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் அநீதியை எதிர்த்து போராடும் வழக்கறிஞராக சூர்யா நடித்துள்ளார்.

தொடர்ந்து பாலா இயக்கத்தில் ஒரு படம், பாண்டிராஜ் இயக்கத்தில் 'எதற்கும் துணிந்தவன்' உள்ளிட்ட படங்களில் சூர்யா நடித்து வருகிறார்.

'எதற்கும் துணிந்தவன்' படத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்ணிற்கு நீதியை பெற்றுத்தர சூர்யா தனியாளாக போராடி, அவர்களைப் பழிவாங்கும் கிராமத்து ஆளாக நடித்திருக்கிறார்.

பாண்டிராஜ் எப்போதுமே இயல்பான கதாபாத்திரங்களையே தேர்ந்தெடுப்பார். அதைப்போல இந்தப் படத்திலும் இயல்பான, எளிமையான சூர்யாவைப் பார்க்க முடியும் என்கிறார் பாண்டிராஜ். ஆனால் சுவரொட்டியில் சூர்யா கையில் அரிவாளுடன் காணப்படுவது படத்தின் எதிர்பார்ப்பைத் தூண்டி உள்ளது. அவருக்கு பிரியங்கா அருள் மோகன் ஜோடியாகியுள்ளார்.

மேலும் 'எதற்கும் துணிந்தவன்' என்ற இந்தத் தலைப்பு சூர்யாவின் தந்தை சிவக்குமார் நடிப்பில் 40 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படத்தின் தலைப்பு என்பது ரசிகர்களுக்கு கூடுதல் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.