'பிக்பாஸ்' நாடியாசாங் அதிருப்தி

1 mins read
6748f5a0-ef23-42bf-9808-87f1ce22c02a
-

'பிக்பாஸ் 5' நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் மலேசியாவின் மாடல் நடிகை நாடியாசாங். குறைவான வாக்குகள் பெற்றதை அடுத்து முதல் வார இறுதியிலேயே முதல் ஆளாக வெளியேற்றப்பட்டார்.

மலேசியாவில் இருந்து கடந்த 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முகேன் வென்றதை அடுத்து நாடியாசாங்கிற்கும் நல்ல பெயர் கிடைக்கும் என்று எதிர்பார்த்து அவரது குடும்பத்தினர் இந்த நிகழ்ச்சிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் முதல் வாரமே அவர் வெளியேறியது அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் விஜய் தொலைக்காட்சி கொடுத்த இரண்டு வார சம்பளம் நாடியாசாங் மலேசியாவில் இருந்து சென்னை சென்றது, தங்கும் செலவு ஆகியவற்றுக்கு போதவில்லை என்றும் அவர் குடும்பத்தினர் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.