திரைத் துளி­கள்

 'ஃபோர்ப்ஸ்' பத்திரிகையின் அட்டையில் நயன்தாரா படம் முன்பு இடம்பெற்றது. அவரை அடுத்து ரெஜினா கஸாண்ட்ராவும் அந்தப் படத்தை அலங்கரிக்கப் போகிறாராம். இதற்காக அண்மையில் ஒரு குழு அவரது வீட்டுக்கே வந்து பலமணி நேரம் செலவிட்டு புகைப்படங்கள் எடுத்துச் சென்றுள்ளதாகத் தகவல். இதழ் வெளியாகும் நாளுக்காக காத்திருக்கிறார் ரெஜினா.

 நடன இயக்குநர் கலா மாஸ்டர் 'காத்து வாக்குல இரண்டு காதல்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அப்படத்தின் நாயகி நயன்தாரா கேட்டுக்கொண்டதால்தான் தாம் நடிக்க முன்வந்ததாகவும் நல்ல கதாபாத்திரங்கள் அமைந்தால் தொடர்ந்து நடிக்கப்போவதாகவும் கூறியுள்ளார் கலா மாஸ்டர்.

 விஜய் சேதுபதி நடித்துள்ள 'முகிழ்' திரைப்படத்தின் மூலம், துக்கத்தில் இருந்து மீண்டு வர காதல் எவ்வாறு உதவுகிறது என்பதைச் சொல்லி இருக்கிறார்களாம். இதில் ரெஜினா நாயகியாக நடித்துள்ளார். சேதுபதியும் இவரும் போட்டி போட்டு நடித்ததாகவும் அது புத்திசாலித்தனத்தை மையமாக வைத்து நடந்த போட்டி என்றும் படத்தின் இயக்குநர் கார்த்திக் விஸ்வநாதன் கூறியுள்ளார்.

 'லிப்ட்' படத்தை அடுத்து, கவின் நாயகனாக நடிக்கும் படத்தில் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' என்ற விஜய் தொலைக்காட்சித் தொடரில் நடித்து வரும் காவ்யா அறிவுமணி (படம்) நாயகியாக அறிமுகமாகி உள்ளார். இதனால் அவர் அத்தொடரில் இருந்து விலகிவிடுவார் என்று வெளியான தகவல் சின்னத்திரை ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளதாம்.

 உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகும் புதிய படம் 'நெஞ்சுக்கு நீதி'. அருண் ராஜா காமராஜ் இயக்குகிறார். இந்தியில் வெளியான 'ஆர்டிகிள் 15' படத்தின் தமிழ் மறுபதிப்பு இது. இந்தப் படம் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாக ஒலிக்கும் என்கிறார் உதயநிதி.

 சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் 'சபாபதி'. இப்படம் நவம்பர் 19ஆம் தேதி வெளியாகிறது. தந்தை, மகன் இடையேயான உறவின் புரிதல் குறித்து அலசுகிறதாம் இந்தப் படம். சந்தானம் இதில் தனது கதாபாத்திரத்தை மிகவும் ரசித்து அனுபவித்து நடித்ததாகச் சொல்கிறார் இயக்குநர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!